13 வயதிலேயே முதல் திரைப்படம் ஓபனாக பேசிய மோகினி.! வைரலாகும் வீடியோ

0

சினிமாவில் முன்னணி நடிகைகளாக கொடிகட்டி பறந்து வந்த பலர் திருமணத்திற்கு பிறகு பெரிதாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வருபவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள் அந்த வகையில் ஒருவர்தான் நடிகை மோகினி. இவர் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக கலக்கி வந்தார்.

அதன் பிறகு குறிப்பிட்ட காலத்திற்கு முன்னணி நடிகையாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்த இவர் திடீரென்று பரத் என்ற தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். திருமணத்திற்குப் பிறகு இவருக்கு அனிருத் மற்றும் அத்வைத் என்ற 2 மகன்கள் உள்ளார்கள் இவர்களின் படிப்பிற்குகாகவும், கணவரின் பிசினஸ்காகவும் அமெரிக்காவில் செட்டிலாகி விட்டதாக சமீப பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

எவர்கிரீன் நாயகியாக வலம் வந்து கொண்டிருந்த இவர் சமீப பேட்டி ஒன்றில் பல தகவலை பகிர்ந்துள்ளார்.அதனைப்பற்றி தற்போது பார்ப்போம் இவர் சினிமாவிற்கு அறிமுகமாகி இதுவரையிலும் 30 வருடங்கள் ஆகிவிட்டதாம் எனவே இவர் ஒன்பதாம் வகுப்பு முடித்துவிட்டு ஈரமான ரோஜாவே என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

mohini 1
mohini 1

இவர் ஹீரோயினாக நடித்த இந்த முதல் படத்தில் இவருக்கு 13 வயதுதானாம் எனவே இந்த திரைப்படத்தை ஒரே சூட்டில் எடுக்க வேண்டும் என்றால் அதற்கு ஃபைவ் ஸ்டார் சாக்லேட் கொடுத்து நடிக்க வைப்பார்கள். இந்தத் திரைப்படத்தில் நடித்து 30 வருடங்கள் ஆனாலும் கூட எனக்கு பெரிதாக தெரியவில்லை என்றும் சமீபத்தில் தான் நடித்தது போல் இருக்கிறது என்றும் கூறியிருந்தார்.

அதோடு மோனிஷாவின் கண் தான் அவருக்கு அழகு என்பது தெரியும் ஏனென்றால் பல நிறங்கள் அவரின் கண்ணில் இருக்கும் இதன் காரணமாக பலரும் இவரை கிண்டல் செய்து இருந்தாலும் நடிகர் கமல் இவரின் கண்ணை பார்த்து விட்டு தனது மகள் அக்ஷராவின் கண் போல் இருக்கிறது என்று மோகனிடம் கூறி இருந்தாராம்.  இதனை சமீப பேட்டி ஒன்றில் மோகினி கூறினார்.