பிரபல இயக்குனரை கட்டியணைத்தபடி நடிகை மீராஜாஸ்மின் வெளியிட்ட புகைப்படம்..! குழப்பத்தில் தவிக்கும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை மீரா ஜாஸ்மின் இவ்வாறு பிரபலமான நமது நடிகை ஒரு நேரத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தது மட்டுமில்லாமல் இவருடைய நடிப்பு பல்வேறு ரசிகர் பெருமக்களையும் கவர்ந்துவிட்டது என்று சொல்லலாம்.

இந்நிலையில் இவர் நடிப்பில் வெளியான அரன் என்ற திரைப்படம் யாராலும் மறக்க முடியாது அதே போல நடிகர் விஷாலுடன் இணைந்து சண்டக்கோழி என்ற திரைப்படத்திலும் நடித்திருப்பார் இந்த திரைப்படத்தில் இவருக்கென கொடுக்கப்படும் பிஜிஎம் மற்றும் இந்த திரைப்படத்தில் அவர் செய்யும் சேட்டைகள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துவிட்டது.

என்னதான் இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இவர் முன்னணி நடிகையாக முதலில் பலம் வந்தது மலையாள திரைப்படத்தின் மூலம் தான். மேலும் இவர் திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் பொழுது காதல் சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார்.

அந்த வகையில் தான் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் பொழுது ராஜேஷ் என்பவருடன் மீரா ஜாஸ்மினுக்கு காதல் ஏற்பட்டது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் ஆனால் அந்த காதல் பின்னர் தோல்வியை சந்தித்து விட்டது. இதன் காரணமாக ஜான் டைட்டஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

மேலும் தன்னுடைய திருமணத்திற்கு பிறகு நடிகை மீரா ஜாஸ்மின் நடிப்பிற்கு முழுக்கு போட்டு அது மட்டுமில்லாமல் இவை ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது. மேலும் நமது நடிகை இரண்டு வருடம் தன்னுடைய திருமண வாழ்க்கையை சந்தோஷமாக கொண்டாடிய நிலையில் தற்போது விவாகரத்திற்கு ரெடியாக உள்ளார்களாம்.

மேலும் இதன் காரணமாக நமது நடிகையும் தற்போது திரைப்படங்களில் நடிக்கவும் ஆர்வம் காட்ட ஆரம்பித்து விட்டார் அந்த வகையில் நமது நடிகை திரைப்படங்களில் தாராளமாக கவர்ச்சி காட்ட ஆரம்பித்தது மட்டுமில்லாமல் சமீபத்தில் மலையாள இயக்குனர் அருண்கோபி உடன் மிகவும் நெருக்கமாக புகைப்படம் எடுத்து சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு அவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தால் நடிகை மீரா ஜாஸ்மின் அந்த இயக்குனரை காதல் செய்வது போல் தெரிகிறது என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

meera jasmine-1
meera jasmine-1
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment