இறந்த கணவரின் கட்டவுட்டை அருகில் வைத்து வளைகாப்பு நடத்திய பிரபல நடிகை!! வைரலாகும் புகைப்படம்.

0

actress megna raj baby shower function with her husband cutout photo viral: நடிகை மேக்னா ராஜ் தமிழ் சினிமாவில் காதல் சொல்ல வந்தேன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். பின்னர் அதைத்தொடர்ந்து உயர்திரு 420, நந்தா நந்திதா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் அதனைத் தொடர்ந்து இவர் கன்னடம், மலையாளம் போன்ற திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் இவர் ஆக்சன் கிங் அர்ஜுனின் சகோதரரான சிரஞ்சீவி சர்ஜா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நடிகர் சிரஞ்சீவி சர்ஜா கடந்த ஜூன் மாதம் திடீரென மாரடைப்பால் காலமானார். மேலும் சிரஞ்சீவி சர்ஜா காலமான போது அவரது மனைவி மேக்னாராஜ் கர்ப்பமாக இருப்பதாகவும் விரைவில் குழந்தை பிறக்கப் போவதாகவும் செய்தி வெளியானது.

எனவே இந்த நிலையில் அவருக்கு தற்போது வளைகாப்பு நடத்தப்பட்டது. கணவர் உயிருடன் இல்லை ஆனால் அவரின் கட்டவுட் டை அருகில் வைத்துக்கொண்டு வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி உள்ளார்கள். அந்த புகைப்படத்தை தற்போது தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ஒளிரச் செய்யும் உங்களின் சிரிப்பை கேட்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றும் நான் உங்களுக்காக காத்திருக்கிறேன் என்றும் அவர் மிகவும் உருக்கமாக அந்த பதிவில் கூறியுள்ளார்.

தற்போது அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

megsraj2
megsraj2
megsraj_1
megsraj_1
megsraj_
megsraj_