பொதுஇடத்தில் ஓடும் ஆட்டோவில் புகையை ஊதிதள்ளும் மீராமிதுன்.!!வைரலாகும் வீடியோ.

0

meeramithun vieo:தற்போது இணையதளத்தில் சர்ச்சை நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை மீரா மிதுன் இவர் பலர் மீது சர்ச்சையை எழுப்பியே பிரபலமடைந்தார். அதுமட்டுமல்லாமல் தனது கவர்ச்சியான புகைப் படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இவரின் மீது ரசிகர்களும் பெரும்பாலான சினிமா பிரபலங்களும் பெரும் கோபத்தில் இருந்து வருகிறார்கள்.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தார் இந்நிகழ்ச்சியில் கூட சேரன் மீது சில சர்ச்சைகளை ஏற்படுத்தினார். அதன் பிறகு ரசிகர்கள் மத்தியில் இவருக்கு எதிர்ப்புகள் எழுந்ததால் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து அனுப்பிவிட்டார்கள்.

இந்நிலையில் இந்நிகழ்ச்சிக்குப் பிறகு பலர் மீது சர்ச்சையை ஏற்படுத்தி வந்த மீரா மிதுன் கடைசியில் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சூர்யா மற்றும் விஜய் அவர்களின் மீதும் இவர்களின் மனைவிகளின் மீதும் பல சர்ச்சையை ஏற்படுத்தினார். எனவே நடிகர் சூர்யா மற்றும் விஜயின் ரசிகர்கள் மீரா மிதுனிற்க்கு பதிலடி கொடுத்து வந்தனர் அதிலும் முக்கியமாக ஜோ மைக்கேல் மீரா மீதுனின் உண்மை முகத்தை அனைவருக்கும் தெரியப் படுத்தினார்

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு கூட இவருடைய அம்மா என் மகளை சில காலங்களாக கானவில்லை என்றும் போன் போட்டால் சுவிட்ச் ஆஃப் என்று வருகிறது. எனவே என் மகளை எப்படியாவது தேடித் தாருங்கள் என்றும் கூறி இணையதளத்தில் வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் தற்பொழுது மீராமிதுன் ஆட்டோவில் அமர்ந்து கொண்டு பொது இடம் என்று கூட பார்க்காமல் கன்னத்தில் குழி விழும் அளவிற்கு சிகரெட்டை இழுத்து புகையை வெளியிடுகிறார். அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.