40 வயதில் கிளாமர் போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை சுண்டி ஈர்க்கும் மீரா ஜாஸ்மின்.!

சினிமாவிற்கு அறிமுகமாகி இருக்கும் அனைத்து நடிகைகளும் தொடர்ந்து தங்களுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியிருப்பவர் தான் நடிகை மீரா ஜாஸ்மின்.

இவர் விஜய், விஷால் நடித்த பல முன்னாடி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அந்தஸ்தை பெற்றார். தற்பொழுது 40 வயதாகும் இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு கலக்கி வருகிறார் அந்த கிளாமர் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது தொடர்ந்து லைக்குகளும், கமெண்டுகளும் குவிந்து வருகிறது.

vimanam
vimanam

லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த ரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமான மீரா ஜாஸ்மின் அதன் பிறகு விஜய்வுடன் இணைந்து புதிய கீதை, விஷாலுடன் சண்டக்கோழி உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் கடந்த 2014ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழ் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தினார்.

meera jasmine 1
meera jasmine 1

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்பொழுது புதிய திரைப்படம் ஒன்றில் கமிட்டாகி உள்ளார். அவர் நடிக்க இருக்கும் படத்திற்கு விமானம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாக இருக்கிற இந்த படத்தில் மீரா ஜாஸ்மின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

meera jasmine
meera jasmine

இதனை அடுத்து மீரா ஜாஸ்மின் பிறந்த நாளை முன்னிட்டு விமானம் படத்தின் அறிவிப்பு வெளிவரும் எனவும் கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த படத்தில் மீரா ஜாஸ்மினுக்கு ஜோடியாக யார் நடிக்கிறார் எனவும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் 40 வயதில் கிளாமர் தூக்கலாக இவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Leave a Comment