கணவர் மறைவிற்கு பிறகு ரீ என்ட்ரி கொடுக்கும் மீனா.. ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சி..

meena
meena

Actress Meena: நடிகை மீனா தனது கணவர் மறைவிற்கு பிறகு திரையுலகில் இருந்து விலகி இருந்த நிலையில் தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் இது குறித்து அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமான இவர் தென்னிந்திய சினிமாவில் சக்சஸ் புல் கதாநாயகியாக விளங்கி வருகிறார். தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிசியாக இருந்து வந்த மீனா கடந்த 2009ஆம் ஆண்டு வித்யாசாகர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதியினருக்கு நைனிகா என்ற மகளும் உள்ளார்.

அப்படி நைனிகாவும் தனது அம்மாவைப் போலவே குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமான நிலையில் விஜய்யின் தெறி திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து மேலும் சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு நுரையீரல் தோற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவருடைய இறப்பு திரைவுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் மீனா தன்னுடைய கணவரின் நினைவுவால் மிக வருத்தப்பட்டு வந்தார். ஆனால் அவருடைய தோழிகள் கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து வெளிவர வைத்து தற்பொழுது தான் சகஜமாக மாறி உள்ளார் மீனா.

அப்படி சமீபத்தில் மீனா 40 நிகழ்ச்சியும் கொண்டாடப்பட்ட நிலையில் இதில் ஏராளமான திரை பிரபலங்கள் கலந்துக் கொண்டு இவர் குறித்து பேசினார்கள். தற்பொழுது நடிகை மீனா தனது சமூக வலைதள பக்கத்தில் நீல் ப்ரொடக்ஷன் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஜெய ஜோஸ் என்ற மலையாள இயக்குனரின் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படம் படத்தில் நடிப்பது குறித்து மீனா, மீண்டும் கேமரா முன் நிற்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் மற்றொரு மறக்க முடியாத கேரக்டரின் நடிக்க தயாராக இருக்கிறேன் என்றும் என்னால் உற்சாகமாக இல்லாமல் இருக்க முடியாது என்றும் என்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தி உள்ளார்.