பிறந்தநாள் கொண்டாடிய “நடிகை மீனா”.! அந்த பார்ட்டியில் யார் யாரெல்லாம் கலந்து கொண்டனர் தெரியுமா.? இதோ அந்த புகைப்படம்.

திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் படிப்படியாக ஹீரோயின் என்ற அந்தஸ்தை படித்தவர்தான் நடிகை மீனா அதுவும் எடுத்த உடனேயே ரஜினியின் “அன்புடன் ரஜினி” என்ற படத்தில் நடித்து பின் அவருக்கு ஜோடியாக நடித்து அசத்தினார். பார்ப்பதற்கு செம்ம அழகாகவும் கும்முன்னு  இருந்ததால் வெகுவிரைவிலேயே ரஜினி, கமல், அஜித் போன்ற டாப் நடிகர்களுடன் நடித்தார்.

அதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் களை உருவாக்கிக் கொண்டார். படத்தின் கதைக்கு ஏற்றவாறு தனது திறமையை மாற்றிக்கொண்டு நடிப்பது இவருக்கு வழக்கம் அதே சமயம் படத்தின் கதைக்கு ஏற்றவாறு கவர்ச்சியிலும் புகுந்து விளையாடுவார். அதனால்தான் தற்போது மக்கள் மனதில் இன்றும் இருந்து வருகிறார் நடிகை மீனா.

இவரைத் தொடர்ந்து இவரது மகளும் சினிமா உலகில் ஓரிரு திரைப்படங்களில் நடித்துள்ளார் இப்படியே ஓடிக்கொண்டிருந்த மீனா திடீரென சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான “அண்ணாத்த” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அழைப்பு வந்தது அதை ஏற்ற மீனா உடல் எடையை அதிரடியாகக் குறைத்து தற்போது அந்த திரைப்படத்தில் வெற்றிகரமாக நடித்து முடித்துள்ளார்.

நிச்சயம் அந்த திரைப்படம் மீனாவுக்கு மீண்டும் பல சினிமா வாய்ப்புகளை பெற்றுத்தரும் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை மீனா சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடினார் அப்பொழுது அவரது பிறந்த நாளையொட்டி பார்ட்டி ஒன்று நடத்தப்பட்டது.

அந்த பார்ட்டியில் திரையுலகில் இருந்த பல நட்சத்திர நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர் அதில் குறிப்பாக சினேகா, சங்கீதா, கனிகா  என பல டாப் நடிகைகள் அந்த விருந்து விழாவில் இருந்தனர். அந்த பார்ட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் பேசும் பொருளாக இருந்து வருகிறது.

meena brithday special
meena brithday special

Leave a Comment