தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் ஒரு பருவ வயதை எட்டிய பிறகு ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்தவர் மீனா. அதுவும் அறிமுக படமே ரஜினி படம் தான். ரஜினியின் முத்து படத்தில் ஹீரோயினாக நடித்து அசத்தினார் அதன்பின் நடிகை மீனா.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான சரத்குமார், சத்யராஜ், அஜித், பிரபு போன்ற நடிகர்களுடன் நடித்து.. தனது மார்க்கெட்டை தக்க வைத்துக் கொண்டார் சினிமாவில் வெற்றியை மட்டுமே கண்டு ஓடிக்கொண்டிருந்த இவர் வித்தியாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின் சினிமா உலகில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகினார். ஒரு கட்டத்தில் சுத்தமாக சினிமாவை விட்டு வெளியேற..
அவரது மகள் நைனிகா சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக உள்ளே நுழைந்தார் . குடும்பமே செம சந்தோஷமாக இருந்தது ஆனால் பிரச்சனையே அதன் பிறகு தான் ஆரம்பித்தது. மீனாவின் கணவர் வித்தியாசாகருக்கு உடல் நிலை சரியில்லாமல் சென்று வந்து கொண்டிருந்தார் என்னவென்று பார்த்தால் அவரது உடலில் நுரையீரல் பாதிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் இவர் இருக்கும் பக்கத்தில் புறாக்கள் அதிகமாக இருப்பதால் அதன் எச்சத்தை இவர் சுவாசித்ததால் இவர் மருத்துவ பலன் இன்றியும் உயிர் இழந்தார். இந்த பெரும் இழப்பிலிருந்து மீனா வெளிவர சில நாட்கள் ஆகும் என கூறப்பட்டது அதேபோல வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்த மீனா தற்போது தனது தோழிகளை முதலில் சந்தித்தார்.
அதன் பின் அவர்களுடன் இணைந்து தற்போது வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். மீனா கணவர் இறந்து 40 நாட்களுக்கு மேல் ஆகி தற்போது தான் வெளியே வந்துள்ளார் வெளியே வந்த உடன் ரம்பா, கலா மாஸ்டர் போன்ற பிரபலங்களுடன் கடற்கரைக்கு சென்றார் அப்பொழுது அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதோ நீங்களே பாருங்கள்.