பள்ளி கட்டணத்தை குறைக்க சொன்னதால் ஆன்லைன் வகுப்பிலிருந்து நீக்கப்பட்ட பிரபல நடிகையின் மகன்கள் !! விவரம் உள்ளே.

0

actress who failed compliant against school for leaving her sons from online class: தமிழ் சினிமாவில் இங்கிலீஷ்காரன், ஆணிவேர், அறை என் 305ல் கடவுள், தூங்கா நகரம் போன்ற பல படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை மதுமிதா. அதுமட்டுமல்லாமல் இவர் பார்த்திபன் இயக்கத்தில் குடைக்குள் மழை என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.

இவர் தெலுங்கு நடிகரான சிவ பாலாஜியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த சிவ பாலாஜி இங்கிலீஷ்காரன் திரைப்படத்தில் மதுமிதாவுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகும் இவர் தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர்களுக்கு தன்வின் கங்குலா மற்றும் ககன் கங்குலா என்ற 2 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் ஹைதராபாத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு மற்றும் ஒன்றாம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இந்த ஊரடங்கு காரணமாக அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களால் மாணவர்களுக்கு கட்டணம் செலுத்த முடியவில்லை எனவே 240 பெற்றோர்கள் கட்டணத்தை குறைக்க சொல்லி கையெழுத்திட்ட கடிதத்தை பள்ளி நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ளனர். அந்த பெற்றோர்களுக்காக இவர்கள் குரல் கொடுத்துள்ளனர்.

அதனை தொடர்ந்து பள்ளி நிர்வாகம் இவர்களின் குழந்தைகள் இருவரையும் ஆன்லைன் வகுப்பிலிருந்து நீக்கியுள்ளனர். காரணம் கேட்டு அவர்கள் பள்ளி நிர்வாகத்திற்கு மெயில் அனுப்பி உள்ளனர் ஆனால் அவர்களோ எந்த ஒரு பதிலும் கூறாததால் தற்போது இவர்கள் மனித உரிமை ஆணையத்திற்கு இந்த பிரச்சினையை கொண்டு சென்றுள்ளார்கள்.

அதுமட்டுமல்லாமல் பள்ளி நிர்வாகம் மதுமிதா மற்றும் அவரது கணவர் வாட்ஸ்அப் குரூப் ஆரம்பித்து அதன் மூலம் பெற்றோர்களிடம் பேசி கட்டணத்தைக் குறைக்க கூறுவதாக தவறாக நினைத்துக் கொண்டார்கள். அதுமட்டுமல்லாமல் பள்ளி நிர்வாகம் கூடுதல் கட்டணம் செலுத்த சொல்லி பெற்றோர்களுக்கு மன அழுத்தம் கொடுப்பதாகவும் கூறியிருக்கிறார் நடிகர் சிவ பாலாஜி .

mathumitha1
mathumitha1
madhumitha
madhumitha