இங்கிலீஷ்காரன் பட நடிகை மதுமிதாவை ஞாபகம் இருக்கிறதா.? இவருடைய கணவர் பிக்பாஸ் டைட்டில் வின்னர் தெரியுமா..

சினிமாவிற்கு அறிமுகமான ஏராளமான நடிகைகள் தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த விட்டு பிறகு தொடர்ந்து சரியான பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் திருமணம் செய்துக் கொண்டு சினிமா பக்கமே தலைகாட்டாமல் இருந்து வரும் ஏராளமான நடிகைகள் இருந்து வருகிறார்கள்.

அந்த வகையில் தற்பொழுது பிரபல நடிகை மதுமிதா தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவர் நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளிவந்த இங்கிலீஷ்காரன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார் இந்த படத்தினை தொடர்ந்து அமீருடன் யோகி, தூங்கவரம், பிரியாணி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

இவ்வாறு தமிழில் நடித்திருந்தாலும் இவருக்கு சொல்லும் அளவிற்கு மார்க்கெட் இல்லாத காரணத்தினால் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. எனவே தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழி திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். இந்நிலையில் இவர் தமிழில் இங்கிலீஷ்காரன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இவருடன் இணைந்து நடித்த சிவா பாலாஜி என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

mathumitha 2

தற்பொழுது நடிகை மதுமிதாவிற்கு  இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் மதுமிதாவை ஏராளமான ரசிகர்கள் பின்பற்றி வரும் நிலையில் சமீபத்தில் அவர் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

mathumitha 1

எனவே இதனை பார்த்த ரசிகர்கள் நடிகை மதுமிதாவிற்கு எவ்வளவு பெரிய மகன்கள் இருக்கிறார்களா என ஆச்சரியப்பட்டு வருகிறார்கள். மேலும் நடிகை மதுமிதாவின் கணவர் சிவா கணேஷ் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் இதனை அடுத்து தெலுங்கில் வெளியான பிக்பாஸ் சீசன் 1வது நிகழ்ச்சியிலும் பங்கு பெற்று டைட்டிலை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Exit mobile version