தன்னுடைய மார்க்கெட்டுக்காக பிரபல நடிகையின் வாய்ப்பை பறித்த நடிகை நயன்தாரா.! நடிகை ஆதங்க பேட்டி..

சமீப பேட்டி ஒன்றில் பிரபல நடிகை ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் தனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில் அந்த வாய்ப்பு நயன்தாராவால் இழந்து விட்டேன் என கூறியிருக்கும் தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக சினிமாவில் இருந்து வரும் மூத்த நடிகைகள் முதல் இளம் நடிகைகள் வரை பலரும் நடிகர் ரஜினிகாந்த் உடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என விரும்பி வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

அப்படி ஆசை இருந்த ஒரு நடிகைக்கு ரஜினிகாந்த் உடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அதனை நயன்தாராவால் இழந்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் குலேசன் இந்த படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தை நடித்திருந்த நிலையில் பசுபதி மற்றும் மீனா ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இவர்களைத் தொடர்ந்து நடிகை நயன்தாரா ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் பிறகு நடிகை மம்தா மோகன்தாசு இந்த படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தாராம். ஆனால் இதனை தெரிந்து கொண்ட நயன்தாரா பட குழுவினர்களிடம் இன்னொரு ஹீரோயின் தேவையில்லை என கூறியதால் இந்த படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டாராம் எனவே தான் நான் அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டேன் என நடிகை மம்தா மோகன் தாஸ் சமீப பேட்டியில் கூறியுள்ளார்.

Mamata Mohan Das
Mamata Mohan Das

இதனை அடுத்து அனுஷ்கா நடிப்பில் வெளிவந்த அருந்ததி படத்தில் முதலில் நான் தான் நடிக்க இருந்ததாகவும் ஆனால் அப்பொழுது நான் தெலுங்கு திரை உலகிற்கு புதிது என்பதால் அந்த படத்தில் நடிக்க பயந்தேன் எனவும் ஒரு அருமையான படத்தை மிஸ் செய்து விட்டோம் என அதன் பிறகு பீல் பண்ணியதாகவும் பேட்டியில் கூறியுள்ளார்.

இவ்வாறு இரண்டு மிகப்பெரிய வாய்ப்பை நடிகை மம்தா மோகன் தாஸ் மிஸ் செய்திருக்கும் நிலையில் அப்படி இந்த இரண்டு திரைப்படங்களிலும் நடித்திருந்தால் கண்டிப்பாக வேற லெவலில் இவருடைய மார்க்கெட் இருந்திருக்கும் என கூறப்படுகிறது.

Leave a Comment