மலையாள நடிகையான மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த நாளிலிருந்து இப்போதுவரையிலும் டாப் நட்சத்திரங்களுடன் பயணிப்பதால் நாளுக்கு நாள் இவரது சினிமா பயணம் அசுர வளர்ச்சியை எட்டிக் கொண்டு இருக்கிறது.
முதலில் இவர் ரஜினியின் பேட்ட படத்தில் நடித்து அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து தளபதி விஜயுடன் மாஸ்டர் திரை படத்தில் ஹீரோயின்னாக நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தார் இப்பொழுதுகூட நடிகர் தனுஷுடன் கைகோர்த்து மாறன் திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் இன்று கோலாகலமாக OTT தளத்தில் வெளியாகி இருக்கிறது.
இவர் நடித்த இரண்டு திரைப்படங்களும் சூப்பர் ஹிட் படங்களாக மாறிய நிலையில் தனுஷின் மாறன் படமும் ஒரு மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக மாறும் என பார்க்கப்படுகிறது சினிமா உலகில் தொடர்ந்து நட்சத்திரங்களுடன் நடித்தாலும் இவர் ஒரு மாடல் அழகி என்பதால் சினிமா நேரம் போக மற்ற நேரங்களில் நாம் எதிர்பார்க்காத அளவிற்கு கிளாமரான புகைப்படங்களை அள்ளி வீசி..
இளசுகள் தொடங்கி சினிமா பிரபலங்கள் அனைவரையும் மூக்கு மேல் விரல் வைக்கும் அசத்துகிறார் மாளவிகா மோகனன். இதனால் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட தமிழ் நாட்டில் இருக்கின்றனர். படங்களை வெளியிடுவதையும் தாண்டி ரசிகர்களுடன் உரையாடுவதும் இவருக்கு கை வந்த கலை இருக்கிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை மாளவிகா தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் பதிலளித்து வருகிறார் அந்த வகையில் ஒரு பேட்டியில் நீங்கள் இப்படி மாறன் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை கைப்பற்றினீர்கள் என கேட்டனர். அதற்கு தனுஷ் தான் எனக்கு இந்த வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது என கூறினார்.
அதே போல பேட்டி ஒன்றில் ஐஸ்வர்யா ராயின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசை இருப்பதாக கூறினார் மேலும் தொடர்ந்து பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டபோது. அதில் ஒன்று சமூக வலைதளப் பக்கத்தில் ஏன் கவர்ச்சியான போட்டோக்களை போடுகிறீர்கள் என கேட்டனர். எனக்கு என்ன 60 வயசா ஆகிடுச்சு.? இப்போ கவர்ச்சி காட்டாமல் இருக்க இப்ப தான் கவர்ச்சி காட்ட முடியும் என பதிலளித்தார்.