மாஸ்டர் திரைபடத்தில் இந்த இரண்டு பாடல்கள் தான் எனக்கு பிடிக்கும்..! மாளவிக்கா மோகனன் ஓப்பன் டாக்..!

actress malavika mohanan like song in mastar movie: தற்சமயம் ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் அதிகம் பேசப்படும் ஒரு விஷயம் என்றால் அது மாஸ்டர் திரைப்படத்தை பற்றி தான். இந்த மாஸ்டர் திரைப்படமானது படப்பிடிப்புகள் முடிவடைந்து 10 மாதங்கள் ஆகி தற்போது தான் ரிலீசாக போகிறது.

இவ்வாறு வெகுநாளாக ரிலீசாகாமல் இருந்ததன் காரணமாக இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்பானது ரசிகர் மத்தியில் மிகவும் அதிகரித்துவிட்டது.  அதுமட்டுமில்லாமல் இந்த திரைபடத்தின் பட குழுவினர்கள் அனைவரும் தற்போது புரமோஷன் வேலையில் மிக தீவிரமாக இறங்கி உள்ளார்கள்.

இன்நிலையில் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார். நடிகை மாளவிகா மோகனன் தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பது வாடிக்கையாக வைத்துள்ளார்.

அந்த வகையில் சமீபத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் இயக்குனரை இந்தியாவில் மிக திறமையான இயக்குனர் என்று குறிப்பிட்டுள்ளார் அதுமட்டுமில்லாமல் மாஸ்டர் திரைப்படத்தில் அவருக்கு பிடித்த பாடல்களை பற்றியும் கூறியுள்ளார்.

நடிகை மாளவிகா மோகனுக்கு மாஸ்டர் திரைப்படத்தில் “குட்டி ஸ்டோரி” மற்றும் “அந்த கண்ணை பார்த்தா” ஆகிய இரண்டு பாடல்களும் மிகவும் பிடிக்குமாம். இதை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அவர் வெளியிட்ட தகவல் தனது சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

malavika mohanan
malavika mohanan

Leave a Comment