தன்னைவிட 10 வயது குறைவாக இருக்கும் நடிகருடன் நெருக்கம் காட்டும் நடிகை மாளவிகா மோகனன்.!

ரஜினிகாந்த் அவர்களுடைய நடிப்பில் வெளிவந்த பேட்ட திரைப்படத்தின் மூலம் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த நிலையில் இதன் மூலம் இவருக்கு தமிழில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். மேலும் இந்த படத்தினை அடுத்து விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

இந்த படத்தில் சொல்லும் அளவிற்கு இவருடைய கேரக்டர் பேசப்படவில்லை ஏனென்றால் பொதுவாக லோகேஷ் கனகராஜ் நடிகர்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களை இயக்கிய வருகிறார் அதோடு மட்டுமல்லாமல் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வருவதால் பெரிதாக நடிகைகளுக்கு முக்கியத்துவம் இருப்பதில்லை அந்த வகையில் மாஸ்டர் திரைப்படம் மாளவிகா மோகனுக்கு அமைந்தது.

இருந்தாலும் இவர் மற்ற நடிகைகளை போலவே சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருவதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதையும் கவர்ந்துள்ளார். இவரை லட்சக்கணக்கானோர் பின்பற்றி வரும் நிலையில் இவர் வெளியிடும் அனைத்து புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது இவர் தொடர்ந்து மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கிறிஸ்டி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் தன்னைவிட 10 வயது குறைவானவரை காதலித்தால் என்ன நடக்கும் என்பது தான் கதையாம்.

malavika mohanan
malavika mohanan

இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன்காக போட்டோ ஷூட் நடத்தப்பட்டுள்ளது. அதில் அந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு செய்ய அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் எக்கு தப்பாக பல கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

Leave a Comment