சினிமாவுலகில் குறைந்த வயதிலேயே நடிக்க அடியெடுத்து வைத்தவர் நடிகை மகிமா நம்பியார். இவர் மலையாளத்தில் வெளியான படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் 2012 சாட்டை என்ற திரைப்படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானர்.
முதல் படமே இவருக்கு தமிழில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்ததை தொடர்ந்து இவர் அடுத்தடுத்த படங்களில் நடித்தார். அந்த வகையில் எண்ணமோ நடக்குது, மொசக்குட்டி, குற்றம் 23, கொடிவீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள், அண்ணனுக்கு ஜே, மகாமுனி, அசுர குரு ஆகிய அனைத்து திரைப்படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.
மேலும் அந்தந்த படத்தின் கதைக்கு ஏற்றவாறு தன்னை முற்றிலுமாக மாற்றி கொண்டு நடித்ததால் இவரது திறமை பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவையும் தாண்டி இவர் மாடல் மற்றும் பாடகராகவும் வலம் வருபவர். இதனால் தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நாயகியாக வலம் வருகிறார் மகிமா நம்பியார்.
2022 இவருக்கு நல்ல ஆண்டாக அமைய அதிக வாய்ப்புகள் இருப்பதாக ஐயங்கரன், ஓ மை டாக் ஆகிய திரைப்படங்கள் வெளிவர ரெடியாக இருக்கின்றன. திரை உலகில் திறமையை காட்டி ஓடி கொண்டிருக்கும் இவருக்கு தமிழை தாண்டி மலையாளத்திலும் படவாய்ப்புகள் ஒருபக்கம் குவிந்தாலும் தனது ரசிகர்களுக்கு அவ்வபோது விருந்து அளித்து வருகிறார்.
இப்படி இருக்கின்ற நிலையில் மாடர்ன் டிரஸ் போட்டு டாட்டூவை முழுவதுமாக காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

