காதல் மன்னன் திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்த நடிகை மானு.. இப்போ எப்படி இருக்கிறார் பாருங்கள்.! வைரலாகும் புகைப்படம்

நடிகர் அஜித்குமார் தனது திரை பயணத்தில் அதிக தோல்விய படங்களை கொடுத்திருந்தாலும் கடந்த சில வருடங்களாக நல்ல கதைகளை தேர்வு செய்து நடிப்பதால் அவருடைய மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது கடைசியாக இவர் நடித்த “துணிவு” திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு சமூக அக்கறை கலந்த ஒரு படமாக இருந்ததால்..

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளி அசத்தியது. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க லைகா நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து தனது 62 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார் அதனை வெற்றிகரமாக முடித்துவிட்டு உலக டூர் அஜித் செல்ல இருக்கிறார் என்ற தகவலும் உறுதியாகி உள்ளது.

இப்படி ஓடிக்கொண்டிருக்கும் அஜித்தின் சினிமா கேரியரில் மிக முக்கியமான படமாக பார்க்கப்படுவது 1998 ஆம் ஆண்டு சரண்  இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த காதல் மன்னன் திரைப்படம் தான். இப்பொழுது கூட இருந்த படம் பார்த்தால் அவ்வளவு சூப்பராக இருக்கும் படத்தில் அஜித்துடன் இணைந்து மானு, எம் எஸ் விஸ்வநாதன், விவேக் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர்.

படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. அண்மையில் இந்த திரைப்படத்தில் நடித்த நடிகை மானு பேட்டி ஒன்றில் சொன்னது என்னவென்றால் காதல் மன்னன் திரைப்படத்தில் நடித்தது எனக்கு மிகப் பெரிய ஒரு அதிர்ஷ்டம் என கூறலாம் ஏனென்றால் இந்த படத்தில் ஒரு பெரிய இயக்குனர், பெரிய தயாரிப்பு மற்றும் அஜித்தை போல ஒரு சக நடிகருடன் நடித்ததற்கு நான் மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என கூறினார்.

தற்பொழுது நடிகை மானு படங்களில் நடிக்காமல் குடும்பத்தை கவனித்து வருகிறார். இவர் தனது கணவர் மற்றும் குழந்தை உடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் அப்ப பார்த்தது போலவே தான் இப்பவும் இருக்கிறீர்கள் என கூறி கமாண்ட் அடித்து வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள்.

maanu

Leave a Comment

Exit mobile version