மெகாஹிட் இயக்குனருடன் லாஸ்லியா வெளியான புகைப்படத்தால் குழப்பத்தில் ரசிகர்கள்.!

செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்துகொண்டு ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு லாஸ்லியாவுக்கு பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

இந்த நிலையில் லாஸ்லியா கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அவர்களுடன் இணைந்து ஃப்ரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் அர்ஜுன் வில்லனாக மிரட்டியுள்ளார்.  மேலும் சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் லாஸ்லியா கூகுள் குட்டப்பன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும்  இந்த திரைப்படத்தில் லாஸ்லியா உடன் இணைந்து தர்ஷன் நடித்து வருகிறார்.

மேலும் கூகுள் குட்டப்பன் திரைப்படத்தில் கேஎஸ் ரவிக்குமார், யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளார்கள்.  இந்த திரைப்படத்தின் புகைப்படம் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் பிரபல இயக்குனரான கேஎஸ் ரவிக்குமாரும் நடிக்கிறார். அந்தவகையில் இவர்கள் இருவரும் ஷூட்டிங்க் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

losliya
losliya

Leave a Comment