நடிகை லட்சுமி மேனனா இது.? ஆளே மாறிடாரே.. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

laxmi-menon
laxmi-menon

மலையாள சினிமாவில் இருந்து தமிழ் பக்கம் அடியெடுத்து வைப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது அந்த வகையில் நயன்தாரா, மாளவிகா மோகனை தொடர்ந்து அடுத்தடுத்த பிரபலங்கள் வருகின்றனர் அப்படி வந்தவர் தான் நடிகை லட்சுமி மேனன் இவர் மலையாளத்தில் ஒன்னு, ரெண்டு படங்களில் நடித்து பின் தமிழில் என்ட்ரி கொடுத்தார்.

இவர் முதலில் சுந்தரபாண்டியன் என்னும் படத்தில் நடித்தார். அந்த படம் வெளிவந்து மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக மாறியதை எடுத்து அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தது அந்த வகையில் கும்கி, குட்டிபுலி, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன் என ஹிட் படங்களை கொடுத்து ஓடியே இவர் அதன்பிறகு நடித்த படங்கள் சறுக்கல்களை சந்தித்தன.. அதிலிருந்து மீட்டெடுத்தது தான் வேதாளம்.

இந்த படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்து ரசிகர்கள் மனதில் கைதட்டல் வாங்கினார் அதன்பிறகு  வாய்ப்புகள் குவிந்தாலும் மேற்படிப்பிற்காக சில காலங்கள் சினிமா பக்கம் தென்படவில்லை.. நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்பொழுது தமிழ் பட வாய்ப்புகளை கைப்பற்றி நடித்து வருகிறார். கைவசம் சந்திரமுகி 2, சிப்பாய் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்த படங்கள் வெற்றி பெறும் பட்சத்தில் லட்சுமி மேனன் தமிழ் சினிமாவில் விட்ட இடத்தை மீண்டும் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் லட்சுமி மேனன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டனர்.

சற்று உடல் எடையை ஏற்று கொழுக் மொழுக்கென்று இருப்பதாக கூறி லட்சுமிமேனன் புகைப்படத்திற்கு கமெண்ட் அடித்து லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர் இதோ நடிகை லட்சுமி மேனன் செம்ம கும்முன்னு இருக்கும் அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..