அம்மா நடித்த அத்தனை படங்களும் ஹிட்.. அவரது மகள் நடித்த 14 திரைப்படங்களும் பிளாப்.. ராசி இல்லை என ஒதுக்கப்பட்ட மகள்..

0

பொதுவாக சினிமாவில் தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்து வந்து நடித்த அனைத்து திரைப்படங்களும் தோல்வியடைந்தால் அந்த நடிகையை வைத்து மற்ற திரைப்படங்களை இயக்குவதற்கு எந்த இயக்குனராக இருந்தாலும் முன்வரமாட்டார்கள்.

அந்த வகையில் தொடர்ந்து ஒரே நேரத்தில் 14 திரைப்படங்களில் நடித்து ஒரு திரைப்படம் கூட வெற்றி பெறாத காரணத்தினால் சினிமாவை விட்டு மொத்தமாக விளங்கிய நடிகை ஒருவர் சமீபத்தில் தனது திரை வாழ்க்கையை பற்றி சிலவற்றை பகிர்ந்துள்ளார்.

அந்தவகையில் எம்ஜிஆர் காலகட்டத்திலிருந்து தற்போது வரையிலும் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து வருபவர்தான் லக்ஷ்மி இவரால் தற்பொழுது கதாநாயகியாக நடிக்க முடியவில்லை என்றாலும் அம்மா உள்ளிட்ட கேரக்டரில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். இவர் தமிழையும் தாண்டி தென்னிந்திய சினிமாவில் அனைத்து மொழிகளிலும் நடித்து சினிமாவில் ஒரு அங்கமாக வலம் வருகிறார்.

lakshmi
lakshmi

அந்த வகையில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் நயன்தாரா போலவே சொந்த வாழ்க்கையில் பல சர்ச்சைகள் இருந்தாலும் திரைவாழ்க்கையில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து வந்தார். எனவே இவ்வாறு உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருந்த இவர் தனது மகளான ஐஸ்வர்யாவையும்  சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார்.

1991ஆம் ஆண்டு வெளிவந்த பிடிச்ச மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக ஐஸ்வர்யா சினிமாவிற்கு அறிமுகமானார். இத்திரைப்படம் தமிழில் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததால் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு சூப்பர் ஹிட் பெற்றது.

இவர் நடித்த முதல் திரைப்படமே சூப்பர் டூப்பர் ஹிட் பெற்றதால் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டு சினிமாக்களிலும் ஒரே நேரத்தில் 14 திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே இந்த 14 திரைப்படம் தன்னை கைவிட்டதாக ஐஸ்வர்யா சமீப பேட்டியில் கூறியிருந்தார்.

aishwariya 02
aishwariya 02

அதோட இந்த 14 திரைப்படமும் சொல்லும் அளவிற்கு வெற்றியைப் பெறாத காரணத்தினால் தன்னை கை ராசியில்லாத நடிகை என்று கூறி திரைப்படங்களில் பெரிதாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறியிருந்தார்.இவர் சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் குணச்சித்திர நடிகையாக தான் நடித்திருந்தார். இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவர் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார்.