இவ்வளவு மேக்கப் போட்டுக்கொண்டுதான் தூங்கவீங்களா.! லட்சுமி மேனன் புகைப்படத்தை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் லட்சுமிமேனன் இவர் தமிழில் முதன்முதலாக 2012ஆம் ஆண்டு சுந்தரபாண்டியன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.  ஆனால் இதற்கு முன் மலையாள திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகம் ஆனார்.

சுந்தரபாண்டியன் திரைப்படம் காலதாமதம் ஆனதால் அதன் பிறகு விக்ரம் பிரபுவுடன் இணைந்து கும்கி திரைப்படத்தில் நடித்திருந்தார்.  இந்த திரைப்படம் இவருக்கு நல்ல விமர்சனங்களைப் பெற்றுக் கொடுத்தது அதுமட்டுமில்லாமல் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்து விட்டார்.

கும்கி திரைப்படத்தை தொடர்ந்து பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம், மிருதன், ரெக்க ஆகிய திரைப்படங்களில் நடித்து இருந்தார். கடைசியாக இவர் புலிகுத்தி பாண்டி படத்தில் நடித்திருந்தால் இந்த திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

lakshmi menon
lakshmi menon

அதுமட்டுமில்லாமல் புளிகுத்திபாண்டி  படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் லட்சுமிமேனன் தன்னுடைய முழு திறமையையும் காட்டி நடித்து இருந்தார். இந்நிலையில் லட்சுமிமேனன் றெக்க திரைப்படத்திற்கு பிறகு நீண்ட காலம் சினிமாவில் நடிக்கவில்லை.

இந்நிலையில் எப்பொழு மீண்டும் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புலிகுத்தி பாண்டியில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார்.  இந்த இடைப்பட்ட காலத்தில் தன்னுடைய படிப்பை முடித்துவிட்டு நடனத்திலும் ஆர்வம் காட்டி வந்தார்.

அதன் புகைப்படங்கள் சமீபத்தில் இணையதளத்தில் வைரலானது. இந்த நிலையில் லட்சுமிமேனன் சமூகவலைதளத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அப்படி தான் தற்பொழுது  தூங்கும் பொழுது முழு மேக்கப் போட்டுக்கொண்டு சில செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மரணமாய் கலாய்த்து வருகிறார்கள்.

lakshmi menon
lakshmi menon

Leave a Comment