ஆத்தாடி இந்த கேட்ட வார்த்தைலாம் பேசுவாங்களா லட்சுமி மேனன்!! ரசிகரின் கேள்விக்கு பதிலடி….

0

actress lakshmi menon reply to her fans in badwords:தமிழ் சினிமாவில் தனது முதல் படத்திலேயே பிரபலமடைந்து தொடர்ந்து பல வெற்றிப் படங்களை தந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நடிகை லட்சுமிமேனன். இவர் சுந்தரபாண்டி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து கும்கி திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார். இதனைத் தொடர்ந்து விஷால், பிரபுதேவா, அஜித், விஜய் சேதுபதி உட்பட இன்னும் ஏராளமான பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.

இவ்வாறு திரை வாழ்க்கை நன்றாக போய்க் கொண்டிருந்த நிலையில் படிப்பை பாதியிலேயே விட்டு வந்ததால் படிப்பை தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் மீண்டும் கல்லூரியில் இணைந்தார் பிறகு சிறிது காலம் சினிமாவிற்கு தலைகாட்டாமல் படிப்பில் ஆர்வம் காட்டி வந்த லட்சுமிமேனன் கல்லூரி படித்து முடித்த பிறகு மிகவும் குண்டாக மாறிவிட்டார்.

எனவே இவருக்கு பட வாய்ப்புகள் பெரிதும் கிடைக்காமல் வந்த காரணத்தினால் தற்பொழுது லாக்டவுனை சரியாக பயன்படுத்திக் கொண்டு மிகவும் ஸ்லிம்மாக மாறி மீண்டும் கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு விண்ணப்பம் போடும் வகையில் மிகவும் ஸ்லிம்மாக மாறிய புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இவரின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். அதுமட்டுமல்லாமல் இவருக்கு தற்பொழுது திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இவரின் ரசிகர்கள் லட்சுமிமனனை தலைமேல் தூக்கிவைத்து ஆகோ ஓகோ என பாராட்டி வந்தார்கள்.

அதற்கெல்லாம் ட்விஸ்ட் வைக்கும் விதமாக தொடர்ந்து ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்து வந்த லட்சுமிமேனன் தற்போது ஒரு ரசிகர் திருமணத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு கல்யாணம் என்பது மிகைப்படுத்தப்பட்ட செக்ஸ் என்று கூறி உள்ளார் அதுமட்டுமல்லாமல் நீங்கள் இன்னும் சிங்கிளாக உள்ளீர்களா என்று கேட்டதற்கு இல்லை என்றும் கூறி உள்ளார். எனவே ரசிகர்கள் தற்பொழுது லக்ஷ்மி மேனனின் மீது சிறிது கடுப்பாகி உள்ளார்கள். இந்த பதிலை கூரி லஷ்மிமேனன் சர்ச்சையில் மாட்டிக்கொண்டுள்ளார்.