நீண்ட நாட்களாக சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த நடிகை லட்சுமிமேனனா இது.! வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ

நடிகை லட்சுமிமேனன் தமிழ் சினிமா நடிகை ஆவார் இவர் தமிழில் சுந்தர பாண்டியன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் நடித்த கும்கி என்ற திரைப்படம் இவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.

கும்கி திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார். பின்பு இவர் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வந்தார்.முதலில் இவர் நடித்து வந்த திரைப்படங்கள் அனைத்தும் குடும்பபாங்கான திரைப்படம்தான்.

ஆனால் போகப்போக மார்டனாக நடிக்க தொடங்கிவிட்டார். இவர் அஜித்துடன் வேதாளம் திரைப்படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்திருந்தார் அதுமட்டுமில்லாமல் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரெக்க திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படி அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்த லட்சுமி மேனன் சற்று உடல் பெருத்து குண்டாக மாறி விட்டார் அதனால் இவருக்கு பட வாய்ப்பும் குறையத் தொடங்கியது.

இந்த நிலையில் இவர் கடந்த மூன்று வருடங்களாக எந்த ஒரு திரைப் படத்திலும் நடிக்கவில்லை தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்டு வரத் தொடங்கியுள்ளார்..சமீபத்தில் லக்ஷ்மி மேனன் படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்ட வீடியோ ஒன்று சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது.

மூன்று வருடங்களுக்குப் பிறகு லட்சுமிமேனனை பார்க்கும் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

Leave a Comment