தனது கன்னக்குழியில் ரசிகர்களை கவர்ந்த லைலா!! இப்போ எப்படி உள்ளார் பாருங்கள்!! வைரலாகும் புகைப்படம்.

actress laila family photo viral: தமிழ் சினிமாவில் தனது சிறந்த நடிப்பின் மூலம் பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து 90களின் சிறந்த நடிகையாக வலம் வந்தவர் நடிகை லைலா.

இவர் தீனா, முதல்வன், ரோஜாவனம், உன்னை நினைத்து, பார்த்தேன் சிரித்தேன், அள்ளித்தந்த வானம், நந்தா, பிதாமகன் போன்ற பல திரைப்படங்களில் நடித்து விருதுகளையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்  இவரின் கன்னக்குழி அழகுக்கும், குழந்தை போல சிரிப்புக்கும் அடிமை ஆகாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதுமட்டுமல்லாமல் இவருடைய குறும்புத்தனமான நடிப்பு பல திரைப்படங்களில் மிக இயல்பாகவே இருந்ததை நாம் பார்த்துள்ளோம்.

இந்த நிலையில் இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் தற்போது ஒரு திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகி உளளார் என செய்தி வெளியாகி வருகிறது.

நடிகை லைலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் மற்றும் குழந்தைகளுடன்  இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

laila-family

Leave a Comment

Exit mobile version