ஆண் பிள்ளை பிறந்ததும் அதிர்ஷ்டம் அடிச்சி தூக்குதோ நயன்தாராவுக்கு.! வரிசைகட்டி நிற்கும் திரைப்படங்கள்..

0
NAYANTHARA
NAYANTHARANAYANTHARA

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா கடந்த 15 வருடங்களாக திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வரும் இவருடைய நடிப்பில் காட்பாதர் திரைப்படம் வெளியானது.

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து இவருடைய நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது அந்த வகையில் பிரேமம் பட இயக்குனர் அல்போனஸ் புத்திரன் இயக்கத்தில் பிரித்திவிராஜ்க்கு ஜோடியாக கோல்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து கனக்ட் படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் டீசர் நயன்தாராவின் பிறந்த நாள் முன்னிட்டு நவம்பர் 18ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் நயன்தாராவை தொடர்ந்து வினய், சத்யராஜ் ஆகியோர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். மேலும் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானுடன் ஜவான் படத்தில் நடித்த வருகிறார்.

இந்த படம் அடுத்த ஆண்டு ரிலீஸ்சாக இருக்கிறது மேலும் அகமது இயக்கத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக இறைவன் என்ற திரைப்படத்திலும், நினேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாராவின் 75 வது படமும் உருவாகி வருகிறது. இந்த படங்களை தொடர்ந்து மலையாள படம் ஒன்றில் நிவின் பாலி உடன் அடித்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு வேறு சில திரைப்படங்களின் அப்டேட்களும் வெளியாக இருக்கிறது.

இவ்வாறு தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் மிகவும் பிசியாக நடித்து வரும் நடிகை நயன்தாரா இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தாயாக இருந்து வருகிறார் எனவே ரசிகர்கள் அனைவரும் ஆண் பிள்ளைகள் பிறந்த நாள் நயன்தாராவிற்கு அதிர்ஷ்டம் அடிச்சி தூக்குதோ என கமெண்ட் செய்து வருகிறார்கள்.