நடிகைகளுக்கு ஆதரவாக ட்வீட் போட்டு சர்ச்சையில் சிக்கிய குஷ்பூ!!

0

ACTRESS kushboo tweet: சமீப காலமாக சினிமா வட்டாரங்களில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய பரபரப்பான விஷயமாக அனைவராலும் பேசப்பட்டு வரும் ஒன்று போதை பொருள் கடத்துவது. அந்த வகையில் பலர் மீது தற்போது வழக்குகள் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் சுஷாந்த் சிங்கின் மரணம் தற்கொலை அல்ல யாரோ போதை பொருள் கொடுத்து கொலை செய்துள்ளார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சுஷாந்த் சிங்கின் காதலியிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதை தொடர்ந்து தற்போது நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சுஷாந்த் சிங்கின் மரணத்தை தொடர்ந்து தற்போது பல நடிகைகள் மீது வழக்கு தொடரப்பட்டு வருகிறது.

அதில் முக்கியமான நடிகைகளான ரகுல் ப்ரீத் சிங், தீபிகா படுகோனே ஆகியவர்களின் மீது தீவிரமாக வழக்கு தொடர்ந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் கன்னட நடிகைகளின் மீதும் வழக்கு தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் போலீஸ்காரர்களும் அனைத்து நடிகர் ,நடிகைகளிடம் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இந்த செயல் சினிமா வட்டாரங்களிலும் மக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குஷ்பு பெண்கள் மட்டும் தான் போதைப் பொருள் பயன்படுத்துவார்களா ஆண்கள் போதைப் பொருளை பயன்படுத்த மாட்டார்களா ஏன் பெண்களை மட்டும் அழைத்து விசாரிக்கிறார்கள்.

ஆண்களுக்கும் இதற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லாதது போல் நடத்துகிறீர்கள். நீங்கள் பெண்களை மட்டும் விசாரிப்பதே மிகப்பெரிய தவறு ஆண்களின் மீதும் கண்டிப்பாக வரவேண்டும் என்று  டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இதில் முக்கியமான ஒன்று குஷ்பு ஒரு அரசியல்வாதி என்பது குறிப்பிடத்தக்கது.