சிரிப்பில் சில்லரையை சிதறவிடும் குஷ்பூ.! வடிவேலு போல் வர்ணிக்கும் ரசிகர்கள் வைரலாகும் புகைப்படம்

0
kushboo
kushboo

பொதுவாக நடிகைகளை பொருத்தவரை அவர்களுடைய இளமை குறையும் வரை மட்டும்தான் அவர்களால் தொடர்ந்து கதாநாயகியாக திரைப்படங்களில் நடிக்க முடியும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு குணசத்திரம் கதாபாத்திரம், துணை கதாபாத்திரம் போன்றவற்றில் தான் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் அந்த வகையில் சில நடிகைகள் சினிமாவை விட்டு விலகி விடுவார்கள் இன்னும் சில நடிகைகள் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களில் நடித்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக கலக்கி வந்தவர் தான் நடிகை குஷ்பூ. இவருடைய கட்டுக்கோப்பான உடல் அமைப்பு, அழகு, சிறந்த நடிப்பு போன்றவை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது. ஒரு காலகட்டத்தில் இவருக்கு ரசிகர்கள் கோவில் கட்டினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்பொழுது வரையிலும் அழகு குறையாமல் கொழுக்கு மொழக்கென இருந்து வருகிறார்.

kushboo 3
kushboo 3

மேலும் சில காலங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்த இவர் தொடர்ந்த அரசியலில் களமிறங்கினார் பிறகு தற்பொழுது தொடர்ந்து தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய கணவர் இயக்குனர் சுந்தர்சியுடன் இணைந்து திரைப்படங்கள் இயக்குவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

kushboo 2
kushboo 2

இப்படிப்பட்ட நிலையில் ரஜினியுடன் இணைந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார். பிறகு தற்பொழுது இவர் பிரபல முன்னணி நடிகர் விஜய் உடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தன்னுடைய அழகிய புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

kushboo 1
kushboo 1

அந்த வகையில் தற்பொழுது புடவையில் அழகான சிரிப்பு, முகத்தில் வெட்கம் என அவர் வெளியிட்டுள்ள அசத்தல் போட்டோவை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரலாக்குவதோடு மட்டுமல்லாமல் வர்ணித்தும் வருகிறார்கள்.‌ இதோ குஷ்புவின் அழகிய புகைப்படங்கள்..

kushboo
kushboo