வெளிநாட்டில் ரொமான்ஸ் செய்யும் சுந்தர் சி-குஷ்புவின் க்யூட் புகைப்படங்கள் இதோ.!

0
kushboo-sundhar-c

தமிழ் திரைவுலகில் ஏராளமான திருமண ஜோடிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் தற்பொழுது இளம் ஜோடிகளை ஓவர் டேக் செய்யும் அளவிற்கு சுந்தர் சி-குஷ்பு இவர்களின் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ள நிலையில் இதற்கு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக லைக்குகள் குவிந்து வருகிறது.

தமிழ் திரைவுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் குஷ்பூ முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் என தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமடைந்தார். மேலும் கடந்த 2000ஆம் ஆண்டு இயக்குனர் சுந்தர் சியை திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதியினர்களுக்கு தற்பொழுது இரண்டு மகள்களும் இருக்கிறார்கள்.

பெரிதாக திரைப்படங்களில் நடிக்காமல் குஷ்பூ சீரியல்களில் நடிப்பதையும் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் சீரியல்களை இயக்கி தானே நடித்தும் வருகிறார் இவ்வாறு மிகவும் பிசியாக இருந்து வரும் இவர் கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட நிலையில் தன்னுடைய பிறந்தநாளை மிகவும் கோலகாலமாக சமீபத்தில் கொண்டாடிய நிலையில் தனது கணவருடன் வெளிநாட்டில் ரொமான்டிக்காக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

kushboo 1
kushboo 1

அதாவது இயக்குனரும் நடிகருமான சுந்தர் சிக்கு பெரிதாக ரொமான்டிக் வராது என பல நிகழ்ச்சிகளில் குஷ்பூ கூறியிருந்தார் மேலும் குஷ்பு தான் அதிக ரொமான்டிக் பர்சன் எனவும் கூறி இருந்த நிலையில் தற்போது இவர்கள் வெளிநாட்டில் ரொமான்ஸ்வுடன் இருக்கும் புகைப்படங்களை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

kushboo
kushboo

மேலும் அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக லைக்குகள், கமெண்டுகள் போன்றவை குவிந்து வருகிறது. இந்நிலையில் தற்பொழுது நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சி இயக்கத்தில் குஷ்பு தயாரிப்பில் உருவாகியுள்ள காபி வித் காதல் என்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.