ஆளே அடையலாம் தெரியாமல் மாறிய கீர்த்தி சுரேஷ்.! வீடியோவை பார்த்து கீர்த்தி சுரேஷா இது என வியக்கும் ரசிகர்கள்….

0

actress keerthy suresh video viral: நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளுக்கு நேற்று ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். மேலும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு ஒரு படி மேலே போய் அவர் இப்போது நடிக்கப் போகும் திரைப்படத்திற்கு ஹீரோயினாக நடிக்க வேண்டும் என கேட்டு இருந்தார்.

மேலும் இவர் நடிகையர் திலகம் என்ற பட்டத்தை பெற்றுள்ளார். இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து அண்ணாத்த படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் மேலும் சில படங்களிலும் கமிட் ஆகியுள்ளார்.

இவர் தற்போது தெலுங்கு மற்றும் தமிழ், ஹிந்தி என பல படங்களிலும் தொடர்ந்து நடிக்க கமிட்டாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது., தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு அவர்கள் கீர்த்திசுரேஷின் நடிப்பை பார்த்து வியந்து சிறந்த நடிகை என கூறியுள்ளார்.

இவர் தேசிய விருதினைப் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று இவர் அணிருத்துடன் நெருக்கமாக தோள் மேல் கை போட்டிருக்கும் புகைப்படத்தினை தனது  ட்விட்டரில் பதிவிட்டுள்ளார், அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவர்கள் இருவரும் இருக்கும் நெருக்கத்தை பார்த்து காதலிக்கிறார்களா என கேள்விகள் கேட்க ஆரம்பித்தனர்.

அதனைதொடர்ந்து இன்று இவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் இவரை பார்ப்பதற்கு அடையாளமே தெரியாமல் உள்ளது. இதோ அந்த வீடியோ.