விக்ரம் பட ஸ்டைலில் துப்பாக்கியை கையில் எடுத்த நடிகை கீர்த்தி சுரேஷ்..! மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

தென்னிந்தியா சினிமாவில் மிகவும் போற்றப்படும் ஒரு கதாநாயகியாக வலம் வந்தவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ் இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில் மாமன்னன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அதேபோல இந்த திரைப்படம் மட்டுமின்றி அவருடைய கைவசம் தற்போது சரண், ரகு தாத்தா ஆகிய திரைப்படங்கள் படபிடிப்பில் இருப்பது மட்டுமில்லாமல் தற்பொழுது புதிதாக மற்றொரு திரைப்படத்திலும் நடிகை கீர்த்தி சுரேஷ் கமிட்டாகி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் அவர் நடிக்க போகும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று இணையத்தில் வெளியாகிய நிலையில் அந்த திரைப்படத்திற்கு ரிவால்வர் ரீட்டா என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை சமந்தா அவர்கள் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை கே சந்துரு அவர்கள் இயக்கி வருகிறார் மேலும் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கையில் துப்பாக்கியுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் இருப்பதை பார்த்த பலரும் இவை விக்ரம் பட போஸ்டர் போல இருக்கிறது என்று கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.

keerthi
keerthi

அது மட்டும் இல்லாமல் இந்த படத்தை பார்க்கும் பொழுது கண்டிப்பாக இது ஒரு பயங்கரமான ஆக்சன் திரைப்படம் ஆக இருக்கும் என எதிர்பார்க்கிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க லேடி விக்ரம் என மற்றொரு பக்கத்தில் ரசிகர்கள் கீர்த்தி சுரேஷ் கலாய்த்து வருகிறார்கள்..

Leave a Comment