நடிகை கீர்த்தி சுரேஷால் அவரின் அக்கா பட்ட கஷ்டங்கள்!! புகைப்படம் இதோ

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் அறிமுகமான சில காலகட்டத்திலேயே திரையுலகில் விடுவிடுவென வளர்ந்தார்.

அதுமட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் இவரின் அழகால் எளிதில் பிடித்து விட்டது.  இவர் தற்போது தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நடிகை கீர்த்தி சுரேஷிற்கு ரேவதி சுரேஷ் என்ற ஒரு அக்கா உள்ளார் என்பது நாம் அறிந்த ஒன்றுதான். இந்நிலையில் ரேவதி சுரேஷ் அவர் வாழ்வில் கஷ்டப்பட்ட சில விஷயங்களை ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.

அதாவது ரேவதி சுரேஷ் தனது உடல் எடையால் நான் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டு உள்ளேன். என் அம்மா மற்றும் தங்கையுடன் என்னை ஒப்பிட்டு தொடர்ந்து ஏளனம் செய்யப்பட்டேன். நான் அவர்களைப் போல அழகாக இல்லை. நான் சாதாரண பெண் போல் இல்லை என்னிடம் ஏதோ தவறு இருப்பதாக நான் எப்போதும் உணர்ந்தேன்.நான் கண்ணாடி முன் பல மணிநேரம் செலவிட்டு எனக்கு என்ன தவறு நான் ஏன் என்னை அழகாக பார்க்க முடியவில்லை என்று ஒரு கட்டத்தில் மிகவும் அழுது புலம்பினேன் என்னையே எனக்கு பிடிக்காமல் போனது.

என் தங்கை கீர்த்தி சுரேஷ் தான் எப்பொழுதும் என்னை மிகவும் பாதுகாப்பாக வைத்துக்கொள்வார். மற்றவர்களிடமிருந்து என்னை காப்பாற்றி வருகிறார்.

எனவே இவ்வாறு கஷ்டப்பட்டு வந்த எனக்கு யோகா பயிற்சியின் மூலம் தற்போது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிவிட்டேன் என்ற பதிவுடன் கீர்த்தி சுரேஷுடன் இருக்கும் புகைப்படத்தை ரேவதி இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.இதோ அந்த புகைப்படம்.

51332427_378462326067720_4972263514489927008_n
keerthi suresh and revathi suresh