குஷி ஜோதிகா போல மாறிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. புகைப்படத்தை பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் முதலில் குழந்தை நட்சத்திரமாக பல்வேறு படங்களில் நடித்து பின் ஹீரோயின்னாக அவதாரம் எடுத்தார்.  தமிழில் இது என்ன மாயம் திரைப்படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக நடித்து அசத்தினார்.

அதனைத் தொடர்ந்து ரஜினிமுருகன், ரெமோ, தொடரி, பைரவா என அடுத்தடுத்த டாப் ஹீரோக்களுடன் நடித்த தனது மார்க்கெட்டை உயர்த்திக்கொண்டார் ஒரு கட்டத்தில் தமிழை தாண்டி மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்து தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார்.

அனைத்து மொழிகளிலும் கீர்த்தி சுரேஷ்க்கு தொடர்ந்து வாய்ப்புகள் ஏராளமாக குவிந்த வண்ணமே இருக்கிறது 2023ல் கூட தெலுங்கில் இரண்டு படமும் தமிழில் ரகு தாத்தா, சைரன், மாமன்னன், ரிவால்வர் ரீட்டா  போன்ற படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தென்னிந்திய உலகில் பிரபலமாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் அனிருத்துடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம்..

ஒரு கட்டத்தில் பெரிய அளவில் வைரலானதால் இருவரும் காதலிக்கிறார்கள் என அப்பொழுது பெரிய அளவில் கிசுகிசுக்கப்பட்டது ஆனால் அதை எல்லாம் ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் கீர்த்தி சுரேஷ் தனக்கான வேலை நடிப்பு மட்டும் தான் என்பதை சரியாக உணர்ந்து கொண்டு அதை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார். திரை உலகில் இப்படி ஜொலிக்கும் இவர் அவ்வப்பொழுது ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வகையில் போட்டோ சூட்டை நடத்துகிறார்.

அந்த வகையில் அண்மையில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் ஒவ்வொன்றும் கிளாமராகவும் அதே சமயம் அழகாகவும் இருந்து வருகின்றன. இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் வைரலாகின தற்போது கூட குஷி ஜோதிகா போல கருப்பு கலர் புடவையில் தனது அழகை காட்டி இவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் ரசிகர்களை புலம்ப வைத்துள்ளது. இதோ நடிகை கீர்த்தி சுரேஷ் கருப்பு கலர் புடவையில் செம அழகாக இருக்கும் அந்த அழகிய புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.

keerthy suresh
keerthy suresh
keerthy suresh
keerthy suresh

Leave a Comment