உலகமெங்கும் வசூலில் பட்டையை கிளப்பிய பிரபல தயாரிப்பு நிறுவனத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ்.! இதுவும் வரலாற்று கதையா.?

0
keerthy-suresh
keerthy-suresh

நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான கே ஜி எஃப் மற்றும் கேஜிஎப் 2 ஆகிய திரைப்படங்களை  தயாரித்த ஹோம்பாலே பிலிம் நிறுவனம் தற்போது ஒரு தமிழ் திரைபடத்தை தயாரிக்க உள்ளது. இந்த தயாரிப்பு நிறுவனம் தற்போது தமிழ் சினிமாவில் நேரடி தமிழ் திரைப்படத்தை தயாரிக்க உள்ள நிலையில் இந்த திரைப்படத்தில் முன்னணி நடிகை ஒருவரை நடிக்க வைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த படத்தின் அதிகாரப்பூர் அறிவிப்பு மிக விரைவில் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. கே ஜி எஃப் 2 மற்றும் காந்தாரா உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்து வெற்றி கண்டு வரும் இந்த நிறுவனம் ஏற்கனவே பிரபாஸ் நடித்த சாலர் உள்ளிட்ட சில திரைப்படங்களை தயாரித்து வருகிறது.

இதில் ஒரு சில திரைப்படங்கள் அடுத்தடுத்த ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழில் நேரடியாக தயாரிக்கும் இந்த நிறுவன தயாரிப்பு படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாகவும் இந்த படம் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படமாக உருவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் எம்எஸ் பாஸ்கர் நடிக்க உள்ளார் என்று தகவல் கிடைத்து உள்ளது. இந்த திரைப்படம் குறித்து அதிகாரப்பூர் அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கப்பட இருப்பதாகவும் கூறபடுகிறது.

அடுத்தடுத்த திரைப்படத்தில் நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது கே ஜி எஃப் பட தயாரிப்பு நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது ரசிகர் மத்தியில் ஏகபோக எதிர்பார்ப்பில் உருவாக இருக்கிறது. விரைவில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இந்த திரைப்படத்தின் அதிகாரப்பூர் அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் எனவும் இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.