ஆடை சர்ச்சையில் சிக்கி கொண்ட கீர்த்தி சுரேஷ்.!! கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்.! வைரலாகும் புகைப்படம்.

0

தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட காலத்தில் முன்னணி நடிகையாக தனது இடத்தைப் பிடித்துக் கொண்டவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடன இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் திலகம் என்ற திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் பல படங்களில் நடிக்க கமிட்டாகி வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்துக்காக இவர் தேசிய விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்குப் பிறகு குண்டாக இருந்த தற்போது இவர் ஒல்லியாக மாறியுள்ளார். இவரின் ஒல்லியான உடம்பை பார்த்து பலர் இவரை கலாய்த்து வந்தனர். குண்டாக இருக்கும் போதுதான் இவர் அழகாக இருந்ததாகவும் கூறுகின்றனர்.

இவர் தற்போது ரஜினியுடன் இணைந்து அன்னாத்த என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தெலுங்கு நடிகரான மகேஷ் பாபுவுடன் இணைந்து நடித்து வருகிறாராம். அதுமட்டுமல்லாமல் இவர் கைவசம் தெலுங்கு திரைப்படங்கள் நிறைய உள்ளதாகவும் பேசப்பட்டு வருகிறது.

படப்பிடிப்பு துவங்கப்பட்ட நிலையில் நடிகர், நடிகைகள் அனைவரும் வியாபாரத்திற்கு வந்துள்ளனர். அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷின் தனது படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஹைதராபாத் விமான நிலையத்திற்கு வந்து இறங்கினார். அப்போது அவர் அணிந்திருந்த ஆடை தான் மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக பேசப்பட்டு வருகிறது.

அதாவது அவர் காத்ரீனா கைப் அணிந்திருந்த ஆடை போலவே அணிந்திருந்தார்.  அதனால் பாலிவுட் முதல் கோலிவுட் வரை உள்ள அனைவரும் இது ஒரு குற்றம் என கீர்த்தி சுரேஷை விமர்சிக்கின்றனர். காத்ரீனா கைப் டிரஸ் போட்டா காத்ரீனா கைப் ஆகிவிட முடியாது என கடுமையான விமர்சனங்களை எழுதி வருகின்றனர். தற்போது அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

keerthi-suresh-katrina
keerthi-suresh-katrina