நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து வருபவர், கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் முதன் முதலாக இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதன்பிறகு விஜய், சூர்யா, விஷால் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார், ஆரம்பகாலத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் பொழுது இவருக்கு நடிப்பு வராது என கலாய்த்தவர்களும் உண்டு, அப்படிக் கலாய்த்தவர்களை மூக்கின் மேல் விரல் வைக்கும் படி சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான மகாநதி திரைப்படத்தில் நடித்து அசத்தினார்.
இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் மிஸ் இந்தியா திரைப்படத்தில் நடித்ததற்காக அதிரடியாக உடல் எடையைக் குறைத்து படத்திலும் நடித்து முடித்தார் இந்த திரைப்படம் நெட்பிளிக்ஸில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
இவர் எடையை குறைத்தது பற்றி பல வதந்திகள் வெளியானது, அதில் இவர் உடல் எடையை குறைத்தால் பாலிவுட் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என பல குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் தற்போது மலையாளத்தில் ஒரு திரைப்படத்திலும் தெலுங்கில் மூன்று திரைப்படத்திலும் தமிழில் அண்ணாத்தே திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
சமூகவலை தளத்தில் எப்பாவது புகைப்படத்தை வெளியிட கீர்த்தி சுரேஷ் தற்போது டீசர்ட் அணிந்து கொண்டு டீ-யை கையில் வைத்துக்கொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.
அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.


