ஏராளமான நடிகைகள் அறிமுகமான தங்களது முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்கள் உள்ளார்கள். அந்த வகையில் தனது நடிப்புத் திறமையினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இவ்வாறு தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரைவுலகில் கொடி கட்டிப் பறந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் இவர். தமிழில் தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமடைந்த பிறகு இவர் மற்ற மொழித் திரைப்படங்களிலும் நடித்து வந்ததால் சமீப காலங்களாக இவருக்கு தமிழில் பெரிதாக திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில் தமிழில் இவர் சாணி காகிதம் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.இத்திரைப்படத்தின் ட்ரெய்லர், டீசர் ஆகியவை வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை தோன்றியது இத்திரைப்படத்திற்கு பிறகு தமிழில் எந்த திரைப்படமும் கைவசம் இல்லை.
இருந்தாலும் இவருக்கு தெலுங்கில் தொடர்ந்து திரைப்படம் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வருகிறார். அந்த வகையில் தற்போது தெலுங்கில் இவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் சர்க்காரு பாரி பாட்டா. இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ்பாபு நடித்து வருகிறார்.
இவ்வாறு இவர்கள் நடித்து வரும் திரைப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் சிறிய தகவல் ஒன்றை ரசிகர்கள்தான் பகிர்ந்துள்ளார். அதாவது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுது தவறுதலாக நடிகர் மகேஷ்பாபு முகத்தில் அடித்து விட்டாராம்.
காட்சி ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது எனக்கே தெரியாமல் திடீரென்று அப்படி நடந்து விட்டது என்று சமீப பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அதோடு மகேஷ்பாபுவிடம் மன்னிப்பு கேட்டாராம் அதற்கு மகேஷ்பாபு அதெல்லாம் ஒன்றுமில்லை தெரியாமல் நடந்த விஷயம் தானே என்று பெருந்தன்மையாக கூறினாராம்.

