சில்க் ஸ்மிதா போல் போஸ் கொடுத்த நடிகை கீர்த்தி சுரேஷ்.! வைரல் புகைப்படம்..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் சமீப காலங்களாக இவருக்கு தமிழில் சொல்லும் அளவிற்கு பட வாய்ப்புகள் அமையவில்லை. அந்த வகையில் ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த படத்தில் நடித்திருந்த நிலையில் இருந்த படம் படும் தோல்வியினை சந்தித்தது.

பிறகு சாணி காகிதம் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தாலும் திரையரங்குகளில் வெளியாகாமல் ஓடிடியில் வெளியானது. இந்நிலையில் சமீப காலங்களாக இவர் தொடர்ந்து தெலுங்கு திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்தவரும் நிலையில் அதே நேரத்தில் சோசியல் மீடியாவிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் தசரா படப்பிடிப்பின் பொழுது கீர்த்தி சுரேஷ் சிலுக்கு சுமிதா போல் போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்ய அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகர் நானியின் பான் இந்தியா படம் தான் தசரா. இந்த படத்தினை ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமா பேனரின் கீழ் சுதாகர் செருக்குரி  தயாரிப்பில் உருவாகி இருந்த நிலையில் இந்த படத்தின் மூலம் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்குனராக அறிமுகமாகி உள்ளார்.

இந்த படத்தில் நானி, கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி, சாய் குமார் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இந்த படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியினை கண்டு வருகிறது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கிராமத்து பெண்ணாக வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

மேலும் தரணி என்னும் கதாபாத்திரத்தில் நானி நடித்துள்ளார். இந்த படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகி உள்ள நிலையில் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றினை கண்டு வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஹீரோ நானி மற்றும் ஹீரோயின் கீர்த்தி சுரேஷ் இருவரும் ஐதராபாத் நகரில் உள்ள சுதர்சன் திரையரங்கில் ரசிகர்கள் மத்தியில் முதல் நாள் முதல் காட்சியை பார்த்து மகிழ்ந்த நிலையில் சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை சில்க் ஸ்மிதா போல போஸ் கொடுத்த புகைப்படத்தை பதிவு செய்ய அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

keerthy suresh
keerthy suresh

Leave a Comment