ஆளு தான் சிங்கிள் பல கோடி சொத்து சேர்த்துள்ள கீர்த்தி சுரேஷின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

Actress Keerthi Suresh Net worth: சினிமாவை பொறுத்தவரை பொதுவாக நடிகர்களை விட நடிகைகளுக்கு குறைவான சம்பளம் தரப்படுவது வழக்கம் அப்படி நடிகைகளை விட நடிகர்கள் தான் பணக்காரர்களாக இருப்பார்கள். இந்நிலையில் திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து வந்தாலும் மறுபுறம் சோசியல் மீடியா, விளம்பரங்களின் மூலம் பல லட்சம் சம்பாதித்து வரும் முக்கியமான நடிகைதான் கீர்த்தி சுரேஷ்.

இவர் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் இவருடைய சொத்து மதிப்பு மற்றும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. மலையாள திரை உலகின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான கீர்த்தி சுரேஷ் இதன் மூலம் தமிழ் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு பெற்றார். அப்படி தமிழில் தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.

கண்ணீர் கடலில் மிதக்கும் பிக் பாஸ் வீடு.. கதறி அழும் கூல் சுரேஷ்.. புதிய டாஸ்க் உடன் இந்த வார ப்ரோமோ

நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் மற்றும் நடிகை மேனகாவின் மகளும் ஆவார் எனவே இதனால் சினிமாவில் எளிதாக திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். அப்படி இவர் நடிப்பில் வெளியான ஏராளமான படங்கள் பாராட்டப்பட்டது எனவே இதற்காக சிறந்த நடிகைகளுக்கான தேசிய விருதையும் வென்றுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் கலக்கி வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார். அப்படி அட்லீ தயாரிப்பில் வருண் தவான் ஹீரோவாக நடித்து வரும் படம் ஒன்றில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதனை அடுத்து மேலும் சில படங்களில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

வேல ராமமூர்த்தியை விட தொக்கான வில்லனை இறக்கிவிட்டு வேடிக்கை பார்க்கும் எதிர்நீச்சல் குழு..

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் ரசிகர்கள், திரை பிரபலங்கள் என அனைவரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அப்படி தற்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு படத்தில் நடிப்பதற்காக ரூபாய் 3 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். மேலும் இவருடைய முழு சொத்து மதிப்பு மட்டுமே ரூபாய் 40 முதல் ரூபாய் 45 கோடி வர இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

Exit mobile version