வாய்ப்பிற்காக இப்படியா செய்வது.? காவியாவின் இன்ஸ்டா புகைப்படத்தை வெளியிட்டு கேள்வி எழுப்பும் நெட்டிசன்ங்கள்..

சினிமாவிற்கு அறிமுகமாகியுள்ள சின்னத்திரை நடிகைகள் முதல் வெள்ளித்திரை நடிகைகள் வரை அனைவரும் தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இதன் மூலம் இவர்களுக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகி வருகிறது.

அதுவும் முக்கியமாக சின்னத்திரையின் மூலம் பிரபலமடைந்து பிறகு வெள்ளித் திரையில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததும் தொடர்ந்து நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற வேண்டும் என்பதற்காக கவர்ச்சியில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் தமிழ் சின்னத்திரைக்கு குடும்ப பெண்ணாக அறிமுகமானவர்தான் காவியா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவு மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில் இந்த சீரியலின் மூலம் பிரபலமடைந்தார். அதன் பிறகு விஜய் டிவியில் முக்கியமான சீரியலான பாண்டியன் ஸ்டோர் சீரியல் முல்லை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

kaviya
kaviya

இதன் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்த இவர் இந்த சீரியலில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு வெளியேறி திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வருகிறார். அந்த வகையில் காவியா கவின் நடித்து வரும் ‘ஊர் குருவி’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படத்தை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்த தயாரித்திருந்தனர்.

kaviya 2
kaviya 2

மேலும் மாஸ்டர் மகேந்திரன் படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இவ்வாறு அடுத்தடுத்து படங்களில் நடித்த பிசியாக இருந்து வந்தாலும் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் இவருடைய கவர்ச்சியான புகைப்படங்களை ரசிகர்கள் வெளியிட்டு சினிமா வாய்ப்பிற்காக இப்படியெல்லாமா செய்வது என கேள்வி எழுப்பி உள்ளனர் இதோ அந்த புகைப்படங்கள்.

kaviya 1
kaviya 1

Leave a Comment