மெரி கிறிஸ்துமஸ் திரைப்படத்தில் கத்ரினா கைஃப் சம்பளம் இத்தனை கோடியா.? வெளியான தகவல்

நடிகர் விஜய் சேதுபதி எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அந்த கேரக்டருக்கு ஏற்றார் போல் தன்னை முழுமையாக செதுக்கி நடிப்பார். தற்போது இவர் ஹீரோ மற்றும் வில்லன் என இரண்டு கதாபாத்திரங்களையும் நடித்து வருகிறார்.  முன்னணி நடிகர்களை விட அதிகமாக  ஒரு வருடத்திற்கு 10 படங்களுக்கு மேல் இவர் நடித்து வருகிறார்.

இந்த நிலையில்  பொங்கலுக்கு ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில்  வெளியான திரைப்படம்  மேரி கிறிஸ்துமஸ். மேலும் இந்த திரைப்படம் தமிழ் மட்டுமல்லாது  தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளும் வெளியானது.

இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக கத்ரீனா கைஃப் நடித்திருந்தார். மேலும் சில முக்கிய கதாபாத்திரங்களான ராதிகா ஆப்தே, காயத்ரி, ராதிகா சரத்குமார் போன்ற சினிமா பிரபலங்களும் நடித்திருந்தனர்.

நடிகை கத்ரினா கைஃப் ஹிந்தியில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் ஹிந்தியில் அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் விஜய் சேதுபதியுடன் மெரி கிறிஸ்துமஸ் என்ற திரைப்படத்தில் இணைந்து நடிக்க 15 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தத் திரைப்படம்  பொங்கலுக்கு வெளியானதால் கலவையான விமர்சனங்களை  பெற்றிருந்தன. ஏனென்றால் சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் தனுஷின் கேப்டன் மில்லர் போன்ற ஆக்ஷன் திரைப்படங்கள் வெளியானதால்  மேரி கிறிஸ்துமஸ் திரைப்படம்  கலவையான விமர்சனத்தை பெற்றது எனவும் கூறலாம்.