1994 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டி இந்திய அழகி போட்டிகளின் வரலாற்றிலேயே மிகவும் முக்கியமானது. அந்த மேடையில் உலக புகழ்பெற்ற ஐஸ்வர்யா ராய் மற்றும் சுஸ்மிதா சென் ஆகிய இருவரும் போட்டி இட்டார்கள்.
அந்தப் போட்டியில் நடிகை கஸ்தூரி மிஸ் சென்னை பட்டத்துடன் உள்ளேன் நுழைந்தார். இந்தியா முழுவதிலும் பல போட்டியாளர்களுக்கு மத்தியில் கஸ்தூரி முதல் 10 இடங்களுக்குள் நுழைந்தார். அந்த போட்டியில் சுஷ்மிதா சென் முதலிடம் பிடித்து மிஸ் இந்தியா பட்டத்தையும் ஐஸ்வர்யா ராய் இரண்டாமிடம் பிடித்து மிஸ் இந்தியா வேர்ல்ட் பட்டத்தையும் வென்றார்.
பிறகு அதே ஆண்டில் சுஷ்மிதா மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தையும் ஐஸ்வர்யா ராய் மிஸ் வேர்ல்ட் பட்டத்தையும் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்கள். அத்தகைய லெஜெண்டுகளுடன் ஒரே மேடையில் போட்டியிட்டதையும் அவர்களிடம் தோற்றுப் போனதையும் பெருமையாக கூறியுள்ளார் நடிகை கஸ்தூரி.