நயன்தாராவாக மாறிய கஸ்தூரி புகைப்படத்தை பார்த்து பாராட்டும் ரசிகர்கள்!! இதோ.

actress kasthuri new photo shuit like nayanthara photos viral: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்கள் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் மூக்குத்தி அம்மன். கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு தான் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் விளையாட்டின் இடையில் ஹாட்ஸ்டார் இல் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் ஆனது.

இந்த திரைப்படம் வருகிற தீபாவளிக்கு ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் அதனைத் தொடர்ந்து திரைப்படத்தில் நயன்தாரா அவர்கள் அம்மன் வேடத்தில் நடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் திடீரென பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளரும் பிரபல நடிகையுமான நடிகை கஸ்தூரி அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அம்மன் வேடத்தில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

ஆனால் இந்த அம்மன் கெட்டப்  நயன்தாராவை போல கஸ்தூரிக்கும் கன கச்சிதமாக பொருந்தி உள்ளது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

kasthuri2
kasthuri2
kasthuri21
kasthuri21
kasthuri_3
kasthuri_3

Leave a Comment