அது விஜய்க்கு தெரியும்.. ஒவ்வொருத்தரையும் கூப்பிட்டு பத்தினின்னு நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை – விலாசம் கஸ்தூரி

Actress kasthuri speech : தமிழ் சினிமாவில் ஹீரோயின்னாகவும், குணச்சத்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருபவர் கஸ்தூரி.  இவர் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில்  கலந்து கொண்டார் அப்பொழுது அவரிடம் பல்வேறு விதமான கேள்வி எழுப்பப்பட்டது அதில் ரஜினிக்கு போட்டியாக நடிகர் விஜயை சூப்பர் ஸ்டார் என்று சிலர் கூறுகிறார்களே..

இது பற்றி உங்கள் கருத்து என்ன என கேள்வி எழுப்பினர் அதற்கு கஸ்தூரி சொன்னது..  ரஜினி மட்டும் தான் எப்பொழுதும் சூப்பர் ஸ்டார் அதே சமயம் நடிகர் விஜய்யும் சிறந்த நடிகர் தற்பொழுது உச்சத்தில் இருக்கிறார் சினிமாவில் இந்த உயரத்திற்கு வருவது ஒன்றும் எளிமையான விஷயம் கிடையாது.

அதேசமயம் அவர் நிச்சயமாக சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்பட மாட்டார் விஜய் பற்றி நமக்கு தெரியாதா அவரை கொண்டாடும் சிலர் அவர் மீது உள்ள அதீத பாசத்தால் இப்படி கூறுகிறார்கள் விஜய்க்கு தெரியும் சூப்பர் ஸ்டார் யார் என்று என கூறியிருந்தார்.

Vijay
Vijay

அடுத்து இணையதள பக்கங்களில் உங்களை பணத்திற்காக எதையும் செய்யக்கூடிய விலைமாது என்றெல்லாம் உங்களை சாட்டுகிறார்கள் அது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினர்.. அதற்கு நான் தினமும் வந்து அனைவரிடமும் கையெடுத்து கும்பிட்டு நான் பத்தினி,  உத்தமி, யோக்கியவள் என்றெல்லாம்..

பதில் கொடுத்து கொண்டிருக்க முடியுமா அப்படி கேள்வி கேட்பவர்கள் எல்லாம் தவிர்த்துவிட்டு நம்முடைய வேலைகளில் கவனம் செலுத்த வேண்டியது தான் என கூறியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அவர் சொல்வது தான் சரி  பாசிட்டிவாக போவதே நல்லது எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.