இவ்வளவு எதிர்ப்புகள் வந்தும் இந்த விஷயத்தில் மௌனம் காப்பது ஏன்..? தடுப்பது பணமா இல்லை பயமா..? இணையத்தில் நெத்தியடி அடிக்கும் கஸ்தூரி.!

0

actress kasthuri latest speech viral in social media: சமூக வலைதள பக்கத்தில் தற்சமயம் மிக வைரலாக பேசப்பட்ட ஒரு செய்தி என்னவென்றால் பிஎஸ்பிபி பள்ளியில் நடந்த  சம்பவம்தான். இவ்வாறு அந்த சம்பவத்திற்கு காரணமான ராஜகோபாலன் என்ற ஆசிரியரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள்.

இந்நிலையில் அந்தப் பள்ளியை இழுத்து மூட வேண்டும் மேலும் அந்த பள்ளியை அரசுடமையாக்க வேண்டும் என சிலர் கூறியது மட்டுமல்லாமல் அந்த பள்ளி நிர்வாகிகளையும் கைது செய்ய வேண்டும் எனவும் பிரபல கட்சி தலைவர்கள் மற்றும் நெட்டிசன்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் பிஎஸ்பிபி பள்ளியில் நடந்தது போல சென்னையில் உள்ள மற்றொரு பள்ளியிலும் இதே போன்ற சம்பவம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அந்த பள்ளிகளை மூட வேண்டுமென  பல்வேறு தரப்பினரிடம் இருந்து குற்றச்சாட்டு வந்த நிலையில் நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார். அதாவது அதில் அவர் கூறியது என்னவென்றால் செட்டிநாடு, பள்ளி மகரிஷி  போன்ற பள்ளியில் தக்க நடவடிக்கை எடுப்பதற்கு காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இவ்வாறு சரியான நடவடிக்கை எடுத்த காவல்துறை அதிகாரிகளுக்கு ஏன் எந்த ஒரு பிரபலமும், அரசியல் கட்சி அமைச்சர்களும் அவர்களை பாராட்ட வில்லை என கூறியது மட்டுமல்லாமல் எந்த மீடியாவும் இதனை ஏன் பெரிதாக்க வில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் பத்ம சேஷாத்ரி பள்ளியை மூட வேண்டும் என  பல்வேறு தரப்பினரிடம் இருந்து குரல் வந்த பிறகும் ஏன் அந்த பள்ளியை மூடாமல் இருக்கிறீர்கள்..? அதற்கு காரணம் ஜாதி பாசமா..? இல்லை பணமா..? இல்லை பயமா என நடிகை கஸ்தூரி கேட்டுள்ளார் பொதுவாக கஸ்தூரி கேட்கும் கேள்விக்கு நெகட்டிவ் கமெண்ட் இணையத்தில் வருவது வழக்கம் தான் அந்த வகையில் இந்த கேள்விக்கும் தாறுமாறாக நெகட்டிவ் பதிவுகள் பதிவாகி வருகிறது.