Actress Kasthuri: நடிகை கஸ்தூரி பேட்டி ஒன்றில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜோவிகா படிப்பு தேவையில்லை என்பது கூறியது குறித்து பேட்டியளித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாக வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கியது. கடந்த இரண்டு வாரங்களாக கருத்து மோதல்களும் தொடங்கி இருக்கிறது.
அப்படி வனிதாவின் மகள் ஜோவிகாவின் படிப்பு தொடர்பாக விசித்ரா பேசியது பேசும் பொருள் ஆகியுள்ளது. விசித்ரா தமிழில் எழுதிக் காட்ட சொல்ல அதற்கு ஜோவிகா எனக்கு தமிழ் வரவில்லை அதனால் நான் எழுத மாட்டேன் என்று கூறினார். இது குறித்து பேட்டி அளித்த கஸ்தூரி நான் பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டேன். அதற்கு முன்னாடியும் நான் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கல, பின்னாடியும் பார்க்கல.
ஆனால் இணையதளத்தில் ஜோவிகா வாழ்க்கையில் ஜெயிப்பதற்கு கல்வி தேவை இல்லை என்று ஆக்ரோஷமாக பேசியிருந்த வீடியோவை பார்த்தேன். என்னை பொருத்தவரை படிப்புக்கும், கல்விக்கும், திறமையையும் நான் சம்பந்தப்படுத்தி பார்க்கவில்லை. படிப்பு என்பது வேறு, திறமை என்பது வேற ஆனால் கல்வி என்பது அடிப்படைத் தகுதி என்பதை விட வாழ்க்கைக்கு ஒரு பேக்கப்பாக படிப்பை சொல்லலாம்.
ஜோவிகாவிற்கு பணம் இருக்கிறது குடும்பப் பின்னணி இருக்கு அவர் ஏற்கனவே ஜெயித்து விட்டார்கள். ஜோவிகாவிற்கு கல்வி தேவையே இல்லை ஆனால் வாழ்க்கையில் போராடிக் கொண்டு இருப்பவர்களுக்கு கல்வி என்பது தேவையான ஒன்று. அழகை நம்பி பொழப்பு தேட முடியாது ஆனால் படிப்பு குறைந்தபட்ச தகுதி இருந்தா ஏதோ ஒரு நேரத்தில் வாழ்க்கைக்கு உதவியாக இருக்கும்.
ஜோவிகா தற்பொழுது தேர்வு எடுத்து இருப்பது கலைத்துறை இதற்கு சம்பளம் கிடைக்குமா கிடைக்காதானு யாருக்கும் தெரியாது. மேலும் ஜோவிகா வனிதா விஜயகுமாரின் மகளாக இல்லாமல் இருந்திருந்தால் 18 வயசு ஆன உடனே இது மாதிரி ஒரு வாய்ப்பு கிடைக்குமா. இவங்களுடைய அம்மாவுக்கும் விஜய் டிவிக்கும் இருக்கும் நட்பை வைத்து தான் ஜோவிகாவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள வாய்ப்பே கிடைத்தது என்று கஸ்தூரி கூறியுள்ளார்.