பிரபல தொலைக்காட்சியில் சீரியலில் நடிக்கும் நடிகை கஸ்தூரி!! எந்த சீரியல் தெரியுமா..

actress kasthuri entry in serial:80 காலகட்டத்தில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் நடிகை கஸ்தூரி.

பின்னர் அதனைதொடர்ந்து அவ்வப்போது இணையதளங்களில் சமூக பிரச்சனைகளில் தலையிட்டு சர்ச்சையில் மாட்டிக் கொள்வார்.

அதுமட்டுமல்லாமல் கடந்த வருடம் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதன் மூலம் மீண்டும் பிரபலமானார்.

அதுமட்டுமல்லாமல் தற்போது உள்ள இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவில் அவ்வப்போது போட்டோ ஷுட்டுகளை நடத்தி இணையதளங்களில் பதிவிட்டு வருவார்.

இந்தநிலையில் இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் அக்னி நட்சத்திரம் என்ற சீரியலில் ருத்ரா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment