என்ன ஈஸ்வரி இதெல்லாம்.? ஆதி குணசேகரனுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்.? மாலத்தீவில் பிகினி உடையில் கிளாமர் வீடியோ வெளியிட்ட எதிர்நீச்சல் சீரியல் நடிகை..

0

சினிமாவைப் பொறுத்தவரை ஏராளமான நடிகைகள் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் தொழில் தங்களுடைய கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது பிரபல நடிகை கனிகா வெளியிட்ட கிளாமர் வீடியோவை பார்த்துவிட்டு ரசிகர்கள் பலரும் ஏராளமான கமாண்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

அதாவது தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற தென்னிந்திய சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் ஹீரோயினாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் கனிகா. இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பைவ் ஸ்டார் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து சேரனின் ஆட்டோகிராப், அஜித்துடன் வரலாறு போன்ற திரைப்படங்கள் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை பெற்று தந்தது.

இதனைத் தொடர்ந்து தெலுங்கு, மலையாள மொழி திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்த இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடைசியாக தமிழில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இவ்வாறு கனிகா நடிப்பது மட்டுமில்லாமல் டப்பிங் பணியையும் மேற்கொண்டு வருகிறார் இந்நிலையில் நடிகை கனிகா சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நடித்த வருகிறார்.

பிற்போக்குத்தனமாகவும், ஆணாதிக்கத்தோடும் சிந்திக்கும் ஆதி குணசேகரன் எனும் கதாபாத்திரத்திற்கு மனைவியாக ஈஸ்வரி என்ற கேரக்டரில் மூத்த மருமகளாக நடித்து வருகிறார். குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் மிகவும் அமைதியாகவும் அழுத்தமான பெண்ணாகவும் நடித்து வரும் நிலையில் இவருடைய கேரக்டருக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

kanika
kanika

மேலும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் கனிகா தற்போது தனது குடும்பத்துடன் மாலத்தீவு சென்றுள்ளார் அங்கு நீச்சல் உடையில் இருக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கும் நிலையில் இதனை பார்த்த ரசிகர்கள் என்ன ஈஸ்வரி இதெல்லாம் ஒருவேளை ஆதி குணசேகரன் மட்டும் பார்த்தால் என்ன ஆகும் தெரியுமா? என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இவ்வாறு நடிகை கனிகாவின் நீச்சல் உடை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில் இவர் சமீப காலங்களாக தொடர்ந்து ஏராளமான ஹாட் போட்டோ ஷூட் நடத்தி வருவது வழக்கமாக வைத்திருக்கிறார் நிலையில் அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.