சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் எதிர்நீச்சல் இந்த சீரியல் தான் தற்பொழுது ஒட்டுமொத்த சீரியல்களையும் ஓவர் டேக் செய்து டிஆர்பி ரேட்டிங்கில் பட்டையை கிளப்பி வருகிறது. மேலும் இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து கேரக்டர்களுக்கும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் அனைவரும் தங்களுக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
அந்த வகையில் வில்லனாக நடித்தாலும் தனது நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்து உள்ளவர்தான் குணசேகரன் இவருக்கு தான் ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். அப்படி குணசேகரனுக்கு மனைவியாக நடித்து கொண்டிருப்பவர் தான் பிரபல நடிகை கனிகா. இவர் பிரசன்னாவுடன் இணைந்து 5 ஸ்டார், அஜித் உடன் வரலாறு போன்ற சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் அஜித்தின் வரலாறு திரைப்படத்தில் அவருடைய காதலியாகவும், அம்மாவாகவும் இரண்டு கேரக்டர்களும் நடித்திருந்தார். இவ்வாறு இந்த படத்திற்குப் பிறகு பெரும்பாலும் இவருக்கு அம்மா கேரக்டரில் தான் நடிப்பதற்கான வாய்ப்புகள் வரிசையாக கிடைத்து வந்ததாம். எனவே தன்னைவிட இரண்டு மடங்கு அதிக வயதுடைய நடிகருக்கு அம்மாவாக நடித்தது ஆபத்தாக இருந்தது எனவும் அஜித்தின் வரலாறு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததால் அம்மாவாக நடித்தது பெரிய விஷயமாக தெரியவில்லை எனவும் கூறியுள்ளார்.
எனவே இந்த படத்திற்கு பிறகு ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் விஜய், விஜயகாந்த், அர்ஜுன், சரத்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களிலும் அவர்களுக்கு அம்மாவாக நடிப்பதற்கான அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்ததாம். இவ்வாறு இதற்கெல்லாம் காரணம் வரலாறு படம் தான் என கூறப்படுகிறது.
இவ்வாறு வரலாறு படத்தில் அஜித்துக்கு அம்மாவாக நடிக்காமல் போயிருந்தால் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஹீரோயினாக நடித்து தன்னுடைய மார்க்கெட்டை தக்க தக்க வைத்துக் கொண்டிருக்கலாம் என்றும் தன்னைத் தேடி வாய்ப்புகள் வந்திருக்கும் எனவும் கூறியுள்ளார்.
மேலும் இவ்வாறு வாய்ப்பு தேடி வந்தவர்களை தனக்கு சின்ன வயதில் எதற்கு இப்படி ஒரு கதாபாத்திரத்தை கொடுக்கிறீர்கள் என திட்டிய அனுப்பி வைத்தாராம். எனவேதான் சினிமாவில் இருந்து நீங்கி குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்துள்ளார். அதன் பிறகு தற்போது தான் தொடர்ந்து எதிர்நீச்சல் சீரியலில் நடித்து பிரபலமடைந்துள்ளார்.