ஒரே ஒரு விருது தான் ஒட்டு மொத்த ரசிகர்களையும் மௌனமாக்கிய நடிகை கங்கனா..! இதுக்கு பேரு தான் பதுங்கி இருந்து பாய்றதோ..?

0
kangana-1
kangana-1

பாலிவுட் சினிமாவில் மிக பிரபலமான நடிகையாகவும் முன்னணி நடிகையாகவும் வலம் வருபவர் தான் கங்கனா ரணாவத் இவ்வாறு பிரபலமான நமது நடிகை பத்மஸ்ரீ விருதை பெற்று சாதனை படைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இதனைத்தொடர்ந்து மணிகர்ணிகா, பங்கா, ஆகிய திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை இதுவரை 4 தேசிய விருதுகளை பெற்று மிக பெருமை சேர்த்த நமது நடிகை பல பிலிம்பேர் விருதையும் பெற்று  தன்னுடைய மதிப்பையும் மரியாதையும் உயர்த்தி உள்ளார்.

அந்த வகையில் நமது நடிகை நேற்று ஜனாதிபதி மாளிகையில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்ட விழா ஒன்றில் கலந்து கொண்டார் அப்போது நமது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் நடிகை கங்கனா ரனாவத் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருதை கொடுத்து கௌரவித்தார்கள்.

இவ்வாறு இந்த நிகழ்ச்சி குறித்து பேசிய நமது நடிகை நான் நன்றி உள்ளவனாக இருக்கிறேன் அதுமட்டுமல்லாமல் என்னுடைய பயணத்தை நான் இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் இருந்து தான் தொடங்கினேன் அந்த வகையில் நான் வெற்றியை அடைவதற்கு 8 முதல் 10 ஆண்டுகள் ஆகிவிட்டது

ஆனால் நான் வெற்றி பெற்ற பிறகும் அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை அந்த வகையில் நான் பிரபலமான தயாரிப்பாளர்களின் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டு வேறு விஷயங்களில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

kangana
kangana

அதுமட்டுமில்லாமல் நான் பணம் சம்பாதிப்பதை விட அதிக அளவு எதிரிகளை மட்டும்தான் சம்பாதித்தேன் இவ்வாறு நான் செய்வதன் மூலம் எனக்கு என்ன லாபம் என பலரும் கேட்டுள்ளார்கள் அந்த வகையில் சிலருக்கு பணம் தேவையாக இருக்கும் அதே போல ஒரு சிலர் புகழை சம்பாதிக்க நினைப்பார்கள் ஆனால் எனக்கு என்ன வேண்டும் என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேட்டிருந்தார்கள்.

அதுமட்டுமில்லாமல் இது உங்கள் வேலை கிடையாது என்று அவமரியாதையாக கங்கனா ரனாவத்திடம் இணையத்தில் பேசிய பல்வேறு நெட்டிசன்களின் கேள்வியையும் இந்த விருது மௌனமாக்கிய உள்ளது என  கூறப்படுகிறது.