விவாகரத்தான நடிகை கல்யாணியின் கணவர்!! பிக் பாஸ் பிரபலமா? வைரலாகும் புகைப்படம்.

0

actress kalyani husband:தமிழ் சினிமாவில் கண்ணுக்குள் நிலவு என்ற விஜய் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை கல்யாணி. இதனைத் தொடர்ந்து பெண்ணின் மனதை தொட்டு, அப்பு, சமுத்திரம், நினைக்காத நாளில்லை, காசி, புன்னகை பூவே,  சமுத்திரம் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

இவர் நிறைய படங்களில் ஹீரோயினாகவும் தங்கச்சி கதாபாத்திரத்திலும் நடித்து உள்ளார். இவர் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட் அடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் இவர் கடைசியாக விஜயசேதுபதியுடன் கருப்பன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

நடிகை கல்யாணி தெலுங்கு இயக்குனரான சூரிய கிரனை 2010ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக  பிரிய போவதாக வதந்தி வந்து கொண்டிருந்தது.

இயக்குனர் சூர்யா கிரன் தெலுங்கு பிக்பாஸில் கலந்து கொண்டார். தற்போது இவருக்கும் நடிகை கல்யாணிக்கும் விவாகரத்து ஆனதை உறுதி படுத்தியுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகிறது.

actress kalyani
actress kalyani