துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் காஜல் அகர்வால் புகைப்படத்தை பார்த்து கிழவி போல் இருக்கிறீர்கள் என கூறும் ரசிகர்கள்.

சினிமா உலகம் எப்படிப்பட்டது என்பதை உணர்ந்து கொண்டு பின் படிப்படியாக முன்னேறி தற்போது தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நாயகியாக மாறி உள்ளவர் காஜல் அகர்வால். கதைக்கு ஏற்றவாறு தனது திறமையை காட்டுவதோடு மட்டுமல்லாமல் சற்று கவர்ச்சியை தூக்கலாக காண்பிப்பதால் ரசிகர்கள் காஜல் அகர்வாலை தலையில் தூக்கி வைத்து தான் கொண்டாடுகின்றனர்.

சினிமா உலகில் வெற்றி நடை கண்டு வந்த காஜல் அகர்வால் வயசு ஏற  ஆரம்பித்ததை உணர்ந்து ஒருகட்டத்தில் தனது நண்பரும் தொழிலதிபருமான கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு ஹனிமூனுக்காக சிறிது காலம் லீவு விட்டார் இவர் தனது கணவரை அழைத்துக்கொண்டு மாலத்தீவு மற்றும் வெளிநாடுகளுக்கு ஓடி திரிந்து கும்மாளம் அடித்த புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார்.

திருமணமான பிறகு மீண்டும் ரசிகர்களை கவர இவர் பிக்னிக் உடை மற்றும் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை அள்ளி வீசினார். இதை பார்த்த ரசிகர்கள் கல்யாணம் ஆன பிறகு தான் உங்களுக்கு இப்படியெல்லாம் கவர்ச்சியை  காட்ட தோணுதா என கூறி கமெண்ட் அடித்தனர்.ஆனால் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மற்றும் படங்களிலும் கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார் அம்மணி.

இவர் பல்வேறு டாப் நடிகர்கள் படங்களை கைப்பற்றி நடிக்க ஒப்பந்தமாகி இருந்த நிலையில் திடீரென காஜல்அகர்வால் கர்ப்பமாக இருந்ததால் அந்த படங்களில் இருந்து தற்போது பின் வாங்கி உள்ளார் .மேலும் தற்போது குழந்தை பெற்றுக்கொள்வதில் அவர் அதிகம் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.இப்படி இருக்கின்ற நிலையில் துளி கூட மேக்கப் இல்லாமல் சுடிதார் போட்டுக்கொண்டு இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்கள் மேக்கப் இல்லாமல் பார்க்கும் போது தான் வயசானவர் போன்று தெரிகிறீர்கள் அதுவும் தோல் சுருங்கி ரொம்ப ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் காஜல் அகர்வாலின் துளிக் கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

kajal-agarwal
kajal-agarwal

Leave a Comment